Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Idhaya vaanil ulavugindra pudhiya megamae
Iniya raagam paada vantha ilaiya nenjamae
Vasanthangal azhaikkindrathey
Varaverppu tharugindrathae….

Female : Idhaya vaanil ulavugindra pudhiya megamae
Iniya raagam paada vantha ilaiya nenjamae
Vasanthangal azhaikkindrathey
Varaverppu tharugindrathae….

Male : Idhaya vaanil ulavugindra pudhiya megamae
Iniya raagam paada vantha ilaiya nenjamae

Female : Karaiyoram alaigalae
Vilaiyaadum pozhuthilae
Aasaikku mudi soottavaa
Imaiyoram vizhigalae
Kadhai pesum nilaiyilae
Inbangal nenjoduu uravaadumae

Male : Idhu enna koondhalaa malaraadum oonjalaa
Idhazhenna thaenadaithaano
Neeyae en kanmani suvaiyoorum maangani
Sinthaamal sirikkindra sinthaamani

Female : Idhaya vaanil ulavugindra pudhiya megamae
Iniya raagam paada vantha ilaiya nenjamae

Female : ……………..

Male : Sethukkaatha sirpamo padikaatha naavalo
Singaara kalaikoodamo
Kavi paadum velaiyil ravi varaman oviyam
Kannana kannae un uruvaanatho

Female : Oru kodi aasaigal ullathin osaigal
Uruvaagum sangeethamae
Un paarvai moganam naanae un seethanam
Unakkaga endrendrum naan sonthamae…

Male : Idhaya vaanil ulavugindra pudhiya megamae
Female : Iniya raagam paada vantha ilaiya nenjamae
Male : Vasanthangal azhaikkindrathey
Both : Varaverppu tharugindrathae….

Both : ………………..

பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்பு தருகின்றதே….

பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்பு தருகின்றதே….

ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

பெண் : கரையோரம் அலைகளே
விளையாடும் பொழுதிலே
ஆசைக்கு முடி சூட்டவா
இமையோரம் விழிகளே
கதை பேசும் நிலையிலே
இன்பங்கள் நெஞ்சோடு உறவாடுமே

ஆண் : இது என்ன கூந்தலா மலராடும் ஊஞ்சலா
இதழென்ன தேனடைதானோ
நீயே என் கண்மணி சுவையூறும் மாங்கனி
சிந்தாமல் சிரிக்கின்ற சிந்தாமணி……

பெண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே

பெண் : …………………

ஆண் : செதுக்காத சிற்பமோ படிக்காத நாவலோ
சிங்கார கலைக் கூடமோ
கவி பாடும் வேளையில் ரவிவர்மன் ஓவியம்
கண்ணான கண்ணே உன் உருவானதோ

பெண் : ஒரு கோடி ஆசைகள் உள்ளத்தின் ஓசைகள்
உருவாகும் சங்கீதமே
உன் பார்வை மோகனம் நானே உன் சீதனம்
உனக்காக என்றென்றும் நான் சொந்தமே…

ஆண் : இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே
பெண் : இனிய ராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
ஆண் : வசந்தங்கள் அழைக்கின்றதே
இருவர் : வரவேற்பு தருகின்றதே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here