Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Vijay Anand

Lyrics by : Idhaya Chandran

Male : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Female : Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Male : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo

Male : Un maenithaan pon veenaiyo
Naan meetta varavo
Female : Nee meettavo en meniyai
Un kaiyil tharavo

Male : Nee pongi varum gangai nadhi
En manjam varum sindhu nadhi
Female : Nee mella vanthu ennaiththoda
En selai konajam vetkam vida
Male : Idhazh velukkum udal silirkkum
Antha mayakkam namai dhinam azhaikkum

Male : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Female : Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Female : Pon maalaiyil poochchooduvaen
Un tholil vizhuven
Male : Thaai polavae naal thorumae
Thaalaatta varuvaen

Female : Nee solliththarum palliyil naan
Adhikaalai varai maanavithaan
Male : Naan un madiyil pillaiyadi
Nee allitharum vallaladi
Female : Uyir udalil ulla varaikkum
Intha nerukkam endrum thodarnthirukkum

Male : Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Idhazh naadagam arangerumo
Vizhi neelaampari paadumo
Female : Pudhu maadhulai tharum thaen suvai
Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Both : ………………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : இதயசந்திரன்

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ….

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….

ஆண் : உன் மேனிதான் பொன்வீணையோ
நான் மீட்ட வரவோ
பெண் : நீ மீட்டவே என் மேனியை
உன் கையில் தரவோ

ஆண் : நீ பொங்கி வரும் கங்கை நதி
என் மஞ்சம் வரும் சிந்து நதி
பெண் : நீ மெல்ல வந்து என்னைத்தொட
என் சேலை கொஞ்சம் வெட்கம் விட
ஆண் : இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்
அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….
பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ….

பெண் : பொன் மாலையில் பூச்சூடுவேன்
உன் தோளில் விழுவேன்
ஆண் : தாய் போலவே நாள்தோறுமே
தாலாட்ட வருவேன்

பெண் : நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்
அதிகாலை வரை மாணவிதான்
ஆண் : நான் உன் மடியில் பிள்ளையடி
நீ அள்ளிதரும் வள்ளலடி
பெண் : உயிர் உடலில் உள்ள வரைக்கும்
இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ….
பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ…..ஓ….ஓ….

இருவர் : ………………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here