Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Idhu ilamai kaala iravu
Angu inimai konjum nilavu
Idhu ilamai kaala iravu
Angu inimai konjum nilavu
Idhil innum enna ninaivu
Sugam irandu perin uravu

Female : Idhu ilamai kaala iravu
Angu inimai konjum nilavu

Female : Agalyai kadhaiyai enni
Thunaiyai marakkalaamaa
Idhu munivan kaalamalla
Sriraman thoodhu sella
Intha velli nilaavinai paarungalaen
Antha palliyilae kadhai ezhuthungalaen

Female : Idhu ilamai kaala iravu
Angu inimai konjum nilavu

Female : Oodal sirithu neram
Koodal adhigamaagum
Naan swaami swwaami endru
Sila mozhigal ulara vendum
Nam nenjukku nimmathi palliyarai
Un nenjinil naan ullavarai

Female : Idhu ilamai kaala iravu
Angu inimai konjum nilavu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இது இளமைக் கால இரவு
அங்கு இனிமை கொஞ்சும் நிலவு
இது இளமைக் கால இரவு
அங்கு இனிமை கொஞ்சும் நிலவு
இதில் இன்னும் என்ன நினைவு
சுகம் இரண்டு பேரின் உறவு……..

பெண் : இது இளமைக் கால இரவு
அங்கு இனிமை கொஞ்சும் நிலவு

பெண் : கதைகள் கவிதையாகும்
கவிதை கதைகளாகும்
இந்த உலகம் எங்கு போகும்
என் உரிமை எங்கு போகும்
இரு கைப்பிடித்தவள் போல் சுகமில்லையே
இதில் கற்பனை என்பது நிஜமில்லையே

பெண் : இது இளமைக் கால இரவு
அங்கு இனிமை கொஞ்சும் நிலவு

பெண் : அகல்யை கதையை எண்ணி
துணையை மறக்கலாமா
இது முனிவன் காலமல்ல
ஸ்ரீராமன் தூது செல்ல
இந்த வெள்ளி நிலாவினைப் பாருங்களேன்
அந்தப் பள்ளியிலே கதை எழுந்துங்களேன்

பெண் : இது இளமைக் கால இரவு
அங்கு இனிமை கொஞ்சும் நிலவு

பெண் : ஊடல் சிறிது நேரம்
கூடல் அதிகமாகும்
நான் ஸ்வாமி ஸ்வாமி என்று
சில மொழிகள் உளற வேண்டும்
நம் நெஞ்சுக்கு நிம்மதி பள்ளியறை
உன் நெஞ்சினிலே நான் உள்ளவரை

பெண் : இது இளமைக் கால இரவு
அங்கு இனிமை கொஞ்சும் நிலவு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here