Singer : Seerkazhi Govindarajan

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Male : Idhu neerodu selgindra odam
Idhil nyaayangal yaar solla koodum
Idhu neerodu selgindra odam
Idhil nyaayangal yaar solla koodum
Endha nenjangal edhanaale aarum
Endha kuttrangal edhanaale theerum

Male : Idhu neerodu selgindra odam
Idhil nyaayangal yaar solla koodum

Male : Sattam yemandhu ponaalum pogum
Dharmam eppodhum pazhi vaangi theerum
Sattam yemandhu ponaalum pogum
Dharmam eppodhum pazhi vaangi theerum
Nee unakaaga uruvakkam nyaayam
Adhu aniyaayam aanaalum aagum

Male : Deivam thaan andrirundha raaman
Avan poi maanai thediyathu baedham
Endha nenjangal edhanaale aarum
Endha kuttrangal edhanaale theerum

Male : Nalla arivodu vaazhnthaarum undu
Vandha vidhiyou sendrarum undu
Nalla arivodu vaazhnthaarum undu
Vandha vidhiyou sendrarum undu
Andha sinam endrum serndhaarai kollum
Nalla manam thaane ennaalum vellum

Male : Nenjil deivangal sila neram vaaum
Andha mirugangal sila neram odum
Endha nenjangal edhanaale aarum
Endha kuttrangal edhanaale theerum

Male : Idhu neerodu selgindra odam
Idhil nyaayangal yaar solla koodum
Idhil nyaayangal yaar solla koodum
Idhil nyaayangal yaar solla koodum
Idhil nyaayangal yaar solla koodum
Idhil nyaayangal yaar solla koodum

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண் : சட்டம் ஏமாந்து போனாலும் போகும்
தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்
சட்டம் ஏமாந்து போனாலும் போகும்
தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்
நீ உனக்காக உருவாக்கும் நியாயம்
அது அநியாயம் ஆனாலும் ஆகும்

ஆண் : தெய்வம்தான் அன்றிருந்த ராமன்
அவன் பொய் மானை தேடியது பேதம்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண் : நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு
வந்த விதியோடு சென்றாரும் உண்டு
நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு
வந்த விதியோடு சென்றாரும் உண்டு
அந்த சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும்
நல்ல மனம்தானே எந்நாளும் வெல்லும்

ஆண் : நெஞ்சில் தெய்வங்கள் சில நேரம் வாழும்
அந்த மிருகங்கள் சில நேரம் ஓடும்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண் : இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here