Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Idhu oru thiruppam ondraagum
Idhu oru thiruppam ondraagum
Idhayaththin viruppam unnaalae
Naan kooda tamil paadum pennaagindrean
Unnaalae naan kooda
Tamil paadum pennaagindraen

Male : Thaalaatha paarvaigal naan paarththa pinnae
Paadaatha paattondru thonaatho kannae
Thaalaatha paarvaigal naan paarththa pinnae
Paadaatha paattondru thonaatho kannae

Male : Idhu oru thiruppam ondraagum
Idhayaththin viruppam unnaalae
Naan kooda nee paadum paattaagindraen
Unnaalae naan kooda nee paadum paattaagindraen

Male : Nadhi thavazhgirathu puralgirathu
Edhai kurippathintha kaatchi
Female : Manam thudikkirathu sugam pirakkirathu
Adhai kurippatharkku saatchi

Male : Nadhi thavazhgirathu puralgirathu
Edhai kurippathintha kaatchi
Female : Manam thudikkirathu sugam pirakkirathu
Adhai kurippatharkku saatchi

Male : Anji varum poongattru
Konjuthadi pooppanthu
Intha sugam maelnaattil engu varum nee kaattu

Female : Aattamillai oottamillai
Naagareega koottamillai kaattinilae
Male : Aalirendum saernthirukkum
Tholirendil saainthirukkum paattinilae

Male : Idhu oru thiruppam ondraagum
Idhayaththin viruppam
Male : Unnaalae naan kooda
Nee paadum paattaagindraen
Unnaalae naan kooda nee paadum paattaagindraen

Female : Kili azhaikkirathu thunai varugirathu
Avai inaivathenna inbam
Male : Unai anaiththu kondu
Adhai puriya vaikka
Manam ninaikkuthoru sontham

Female : Kili azhaikkirathu thunai varugirathu
Avai inaivathenna inbam
Male : Unai anaiththu kondu
Adhai puriya vaikka
Manam ninaikkuthoru sontham

Female : Neeyum oru kiliyaaga
Naanum oru kiliyaaga
Maattri vidu sugamaaga naalai oru vazhiyaaga

Male : Manjalukku selaikatti
Maalaiyittu poo mudiththu nee varuga
Female : Pon niraththil selai katti
Un kazhuththil maalaiyida varuvaenae

Male : Idhu oru thiruppam ondraagum
Idhayaththin viruppam
Female : Unnaalae naan kooda
Tamil paadum pennaagindraen
Male : Unnaalae naan kooda
Nee paadum paattaagindraen….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இது ஒரு திருப்பம் ஒன்றாகும்
இது ஒரு திருப்பம் ஒன்றாகும்
இதயத்தின் விருப்பம் உன்னாலே
நான் கூட தமிழ் பாடும் பெண்ணாகின்றேன்
உன்னாலே நான் கூட
தமிழ் பாடும் பெண்ணாகின்றேன்

ஆண் : தாளாத பார்வைகள் நான் பார்த்த பின்னே
பாடாத பாட்டொன்று தோணாதோ கண்ணே
தாளாத பார்வைகள் நான் பார்த்த பின்னே
பாடாத பாட்டொன்று தோணாதோ கண்ணே

ஆண் : இது ஒரு திருப்பம் ஒன்றாகும்
இதயத்தின் விருப்பம் உன்னாலே
நான் கூட நீ பாடும் பாட்டாகின்றேன்……
உன்னாலே நான் கூட நீ பாடும் பாட்டாகின்றேன்….

ஆண் : நதி தவழ்கிறது கரை புரள்கிறது
எதை குறிப்பதிந்த காட்சி
பெண் : மனம் துடிக்கிறது சுகம் பிறக்கிறது
அதை குறிப்பதற்கு சாட்சி

ஆண் : நதி தவழ்கிறது கரை புரள்கிறது
எதை குறிப்பதிந்த காட்சி
பெண் : மனம் துடிக்கிறது சுகம் பிறக்கிறது
அதை குறிப்பதற்கு சாட்சி

ஆண் : அஞ்சி வரும் பூங்காற்று
கொஞ்சுதடி பூப்பூத்து
இந்த சுகம் மேல்நாட்டில் எங்கு வரும் நீ காட்டு

பெண் : ஆட்டமில்லை ஓட்டமில்லை
நாகரீக கூட்டமில்லை காட்டினிலே
ஆண் : ஆளிரெண்டும் சேர்ந்திருக்கும்
தோளிரண்டில் சாய்ந்திருக்கும் பாட்டினிலே

பெண் : இது ஒரு திருப்பம் ஒன்றாகும்
இதயத்தின் விருப்பம்
ஆண் : உன்னாலே நான் கூட
நீ பாடும் பாட்டாகின்றேன்……
உன்னாலே நான் கூட நீ பாடும் பாட்டாகின்றேன்……

பெண் : கிளி அழைக்கிறது துணை வருகிறது
அவை இணைவதென்ன இன்பம்
ஆண் : உனை அணைத்துக் கொண்டு
அதை புரிய வைக்க
மனம் நினைக்குதொரு சொந்தம்

பெண் : கிளி அழைக்கிறது துணை வருகிறது
அவை இணைவதென்ன இன்பம்
ஆண் : உனை அணைத்துக் கொண்டு
அதை புரிய வைக்க
மனம் நினைக்குதொரு சொந்தம்

பெண் : நீயும் ஒரு கிளியாக
நானும் ஒரு கிளியாக
மாற்றி விடு சுகமாக நாளை ஒரு வழியாக

ஆண் : மஞ்சளுக்கு சேலைக்கட்டி
மாலையிட்டு பூ முடித்து நீ வருக
பெண் : பொன் நிறத்தில் சேலைக் கட்டி
உன் கழுத்தில் மாலையிட வருவேனே

ஆண் : இது ஒரு திருப்பம் ஒன்றாகும்
இதயத்தின் விருப்பம்
பெண் : உன்னாலே நான் கூட
தமிழ் பாடும் பெண்ணாகின்றேன்
ஆண் : உன்னாலே நான் கூட
நீ பாடும் பாட்டாகின்றேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here