Singers : Yuvan Shankar Raja and Shakthisree Gopalan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vivek

Female : Kondrathu nee
Thandannai enaku
Nee illa ulagil vaazhkai irukka

Female : Idhu pola valiyum unda
Indre naan kanden
Nee poona valaivil thaane
Thaniyaai naan nirkindren

Female : Ulagellam sundi ottrai pulli
Aagum naalaachche
Ul udhiram kooda kanneeraagi
Veliye poyaache

Female : Naan endru edho illai
Ellaam unnodu
En pol kaadhal seiya
Yaaro mannodu

Female : Ninaivugalil theekulithen
Marandhaalum meendum
Undhan mugame vandhaadum
Irandhaalum saambal kooda
Unnai kondaadum

Female : Nam pillaikaaga perai vaithen
Naanum unnodu
Adhi sollum munne
Neeyum ponaai vaazhve mullodu

Male : Dhooram illai thunaiyum illai
Kulappam kodukaathae
Ini maranam illai marunthum illai
Naduvil niruthathae

Male : Nijam pola pinne vandhu
Nilazhaalagi pogadhe
Kadal pole kaadhal thandhu
Adhai kanner aakadhae

Male : Ennai vittu sollaamal
Uyir pogudhudhae
Nee thotta idam ellam
Karai aagudhae

Male : Andha mazhi kaalam
Adhu thirumbathaa

Female : Marandhaalum meendum
Undhan mugame vandhaadum
Irandhalum saambal kooda
Unnai kondaadum

Female : Nam pillaikaaga perai vaithen
Naanum unnodu
Adhi sollum munne
Neeyum ponaai vaazhve mullodu

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : கொன்றது நீ தண்டனை எனக்கு
நீ இல்லா உலகில் வாழ்க்கை இருக்கா

பெண் : இது போல வலியும் உண்டா
இன்றே நான் கண்டேன்
நீ போன வளைவில் தானே
தனியா நான் நின்றேன்

பெண் : உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி
ஆகும் நாளாச்சே
உள் உத்திரம் கூட கண்ணீராகி
வெளியே போயாச்சே

பெண் : நான் என்று எதோ நின்னாயே
எல்லாம் உன்னோடு
என் போல் காதல் செய்ய
யாரோ மண்ணோடு

பெண் : நினைவுகளில் தீக்குளித்தேன்
மறந்தாலும் மீண்டும்
உந்தன் முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்

பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு

ஆண் : தூரம் இல்லை துணையும் இல்லை
குழப்பம் கொடுக்காதே
இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை
நடுவில் நிறுத்தாதே

ஆண் : நிஜம் போல பின்னே வந்து
நிழலாகி போகாதே
காதல் போல் காதல் தந்து
அதை கண்ணீர் ஆக்காதே

ஆண் : என்னை விட்டு சொல்லாமல்
உயிர் போகுதே
நீ தொட்ட இடம் எல்லாம்
கரை ஆகுதே

ஆண் : அந்த மழை காலம்
அது திரும்பாதா

பெண் : மறந்தாலும் மீண்டும் உந்தன்
முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்

பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here