Singer : T. M. Soundararajan

Music by : M. B. Sreenivas

Lyrics by : Vaali

Male : Pudhu vellam….pudhu vellam…pudhu vellam…

Female : Idhu pongi varugindra pudhu vellam

Male : Idhu pongi varugindra pudhu vellam
Oru thangu thadaiyindri idhu sellum
Idhi thadukka ninaiththaalum odukka ninaiththaalum
Edhirththu nindru idhu vellum

Male : Idhu pongi varugindra pudhu vellam
Oru thangu thadaiyindri idhu sellum

Male : Pudhu vellam…..idhu vellum….

Male : Perum kaattu marangalai perththu
Neer maettu nilangalil vaarththu
Ungal vaazhuvukku valangalai saerththu
Naangal veedhiyil nindrom verththu

Male : Ungal kaigalil kanaththidum panappai
Vantha kaaranam uzhavanin kalappai
Ungal kaigalil kanaththidum panappai
Vantha kaaranam uzhavanin kalappai
Engal thozhargal vazhangiya uzhaippai
Undu kozhuththathu ungal iraippai

Male : Idhu pongi varugindra pudhu vellam
Oru thangu thadaiyindri idhu sellum

Male : Pudhu vellam…..idhu vellum…..

Male : Ungal varuvaai perukkiya koottam
Ingu oru vaai soththukku vaattam
Ungal varuvaai perukkiya koottam
Ingu oru vaai soththukku vaattam
Idhai arivaal unarnthida vendum
Illai oru naal erimalai thondrum

Male : Veen pazhisolli thoduppaar vazhakku
Antha paavigal naavinai adakku
Veen pazhisolli thoduppaar vazhakku
Antha paavigal naavinai adakku
Ner vazhiyinuil nadappavar thamakku
Vettri nichchayam kaalaththin kanakku

Male : Idhu pongi varugindra pudhu vellam
Oru thangu thadaiyindri idhu sellum

Male : Pudhu vellam…..idhu vellum…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : புதுவெள்ளம்……புது வெள்ளம்…..புது வெள்ளம்…..

ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்

ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்
ஒரு தங்கு தடையின்றி இது செல்லும்
இதை தடுக்க நினைத்தாலும் ஒடுக்க நினைத்தாலும்
எதிர்த்து நின்று இது வெல்லும்…….

ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்
ஒரு தங்கு தடையின்றி இது செல்லும்

ஆண் : புது வெள்ளம்…………இது வெல்லும்………

ஆண் : பெரும் காட்டு மரங்களை பேர்த்து
நீர் மேட்டு நிலங்களில் வார்த்து
உங்கள் வாழ்வுக்கு வளங்களை சேர்த்து
நாங்கள் வீதியில் நின்றோம் வேர்த்து

ஆண் : உங்கள் கைகளில் கனத்திடும் பணப்பை
வந்த காரணம் உழவனின் கலப்பை
உங்கள் கைகளில் கனத்திடும் பணப்பை
வந்த காரணம் உழவனின் கலப்பை
எங்கள் தோழர்கள் வழங்கிய உழைப்பை
உண்டு கொழுத்தது உங்கள் இரைப்பை

ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்
ஒரு தங்கு தடையின்றி இது செல்லும்

ஆண் : புது வெள்ளம்…………இது வெல்லும்………

ஆண் : உங்கள் வருவாய் பெருக்கிய கூட்டம்
இங்கு ஒரு வாய் சோத்துக்கு வாட்டம்
உங்கள் வருவாய் பெருக்கிய கூட்டம்
இங்கு ஒரு வாய் சோத்துக்கு வாட்டம்
இதை அறிவால் உணர்ந்திட வேண்டும்
இல்லை ஒரு நாள் எரிமலை தோன்றும்

ஆண் : வீண் பழிச்சொல்லி தொடுப்பார் வழக்கு
அந்த பாவிகள் நாவினை அடக்கு
வீண் பழிச்சொல்லி தொடுப்பார் வழக்கு
அந்த பாவிகள் நாவினை அடக்கு
நேர் வழியினில் நடப்பவர் தமக்கு
வெற்றி நிச்சியம் காலத்தின் கணக்கு

ஆண் : இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்
ஒரு தங்கு தடையின்றி இது செல்லும்

ஆண் : புது வெள்ளம்…………இது வெல்லும்………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here