Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae
Ilaigalil vilaiyaadum kanith thottamae
Un isaiyum kann asaivum konjum panikkoottamae

Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae

Female : Alaigalil vilaiyaadum nathiyottamae
Alaigalil vilaiyaadum nathiyottamae
Un alagum pon manamum pillai nizhalaattamae

Female : Alaigalil vilaiyaadum nathiyottamae

Male : Aayiram kili koottam ondraaga vanthatho
Aa…aa….aaa….aa….
Aayiram kili koottam ondraaga vanthatho
Aalilai thalir unthan ponmeani thanthatho

Female : Mothira viral enthan mugam paarththuk kondatho
Mothira viral enthan mugam paarththuk kondatho
Mugam paarththu pin vanthu kadhaiyondru sonnatho

Male : Azhagiya ponnaadai unai moodi kondatho
Azhagiya ponnaadai unai moodi kondatho
Pagalilum idhu polavae ninaivenna vanthatho

Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae

Male : Thaenkuzhal kaipottu vilaiyaada sollutho
Thaenkuzhal kaipottu vilaiyaada sollutho
Sevvithazh vaavendrum thaavendrum kenjuthae

Female : Naan thara mudiyaatha naadagam illaiyae
Naan thara mudiyaatha naadagam illaiyae
Naan thara ninaiththaalum naanamthaan thollaiyae

Male : Thookkathil thudikkindra pooppondra ullamae
Thookkathil thudikkindra pooppondra ullamae
Iniyenna ennaalum anantha vellamae

Female : Yaekkaththil thudikkindra poopondra ullamae
Yaekkaththil thudikkindra poopondra ullamae
Iniyenna ennaalum anantha vellamae

Male : Ilaigalil vilaiyaadum kanith thottamae
Un isaiyum kann asaivum konjum panikkoottamae

Both : Ilaigalil vilaiyaadum kanith thottamae….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே
இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே
உன் இசையும் கண் அசைவும் கொஞ்சும் பனிக் கூட்டமே

ஆண் : இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே

பெண் : அலைகளில் விளையாடும் நதியோட்டமே
அலைகளில் விளையாடும் நதியோட்டமே
உன் அழகும் பொன் மணமும் பிள்ளை நிழலாட்டமே

பெண் : அலைகளில் விளையாடும் நதியோட்டமே

ஆண் : ஆயிரம் கிளிக் கூட்டம் ஒன்றாக வந்ததோ….
ஆஅ…..ஆஅ……ஆஆ…..ஆ……
ஆயிரம் கிளிக் கூட்டம் ஒன்றாக வந்ததோ….
ஆலிலைத் தளிர் உந்தன் பொன்மேனி தந்ததோ

பெண் : மோதிர விரல் எந்தன் முகம் பார்த்துக் கொண்டதோ
மோதிர விரல் எந்தன் முகம் பார்த்துக் கொண்டதோ
முகம் பார்த்துப் பின் வந்து கதையொன்று சொன்னதோ

ஆண் : அழகிய பொன்னாடை உனை மூடிக் கொண்டதோ
அழகிய பொன்னாடை உனை மூடிக் கொண்டதோ
ஆயினும் கண்கள் அங்கங்கள் கண்டதோ

பெண் : பழகிடும் முன்பாக பருவங்கள் காண்பதோ
பழகிடும் முன்பாக பருவங்கள் காண்பதோ
பகலிலும் இதுபோலவே நினைவென்ன வந்ததோ

ஆண் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே

ஆண் : தேன்குழல் கைபோட்டு விளையாடச் சொல்லுதோ
தேன்குழல் கைபோட்டு விளையாடச் சொல்லுதோ
செவ்விதழ் வாவென்றும் தாவென்றும் கெஞ்சுதே

பெண் : நான் தர முடியாத நாடகம் இல்லையே
நான் தர முடியாத நாடகம் இல்லையே
நான் தர நினைத்தாலும் நாணம்தான் தொல்லையே

ஆண் : தூக்கத்தில் நினைத்தாலும் சிரிக்கின்ற இன்பமே
தூக்கத்தில் நினைத்தாலும் சிரிக்கின்ற இன்பமே
தொடங்கட்டுமா இன்று மாணிக்க கிண்ணமே

பெண் : ஏக்கத்தில் துடிக்கின்ற பூப்போன்ற உள்ளமே
ஏக்கத்தில் துடிக்கின்ற பூப்போன்ற உள்ளமே
இனியென்ன எந்நாளும் ஆனந்த வெள்ளமே

ஆண் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே
உன் இசையும் கண் அசைவும் கொஞ்சும் பனிக்கூட்டமே

இருவர் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here