Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Female : Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Male : Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu

Female : Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Female : Mannam madiyil naan aada
Manjal kulithu poochooda
Male : Oomai kanavil naan vaada
Unnai ninaithu poraada

Female : Ammadi unnalae
Thookkam yedhu raathiriyil
Male : Innum enna naanam vittu
Ennai thazhuvu
Female : Unnai vittu engae povum
Indha nilavu
Male : Mutham ondru veikka sollum
Pattu udhadu
Female : Ketti melam kotti thaanae
Kaattil uravu

Male : Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Female : Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Male : Veenai irukka meettaamal
Vendum swarangal koottaamal
Female : Andhapurathil nee meettu
Aadhi thaalathai nee pottu
Male : Kaiyodum meiyodum
Kaadhal devan keerthanai thaan

Female : Poga poga ennaennavo
Raagam pirakkum
Male : Paada paada ponnulagin
Vaasam thirakkum
Female : Endha poovum vaasam veesum
Velai irukku
Male : Thendral vandhu poovai killa
Thaedhi edharkku

Female : Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Male : Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

Female : Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Male : Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu

Both : Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
ஆண்: பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது

பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

பெண் : மன்னன் மடியில் நானாட
மஞ்சள் குளித்து பூச்சூட
ஆண் : ஊமை கனவில் நான் வாட
உன்னை நினைத்து போராட

பெண் : அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில்
ஆண் : இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு
பெண் : உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு
ஆண் : முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு
பெண் : கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு

ஆண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
பெண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

ஆண் : வீணை இருக்கு மீட்டாமல்
வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல்
பெண் : அந்தப்புரத்தில் நீ மீட்டு
ஆதி தாளத்தை நீ போட்டு
ஆண் : கையோடும் மெய்யோடும்
காதல் தேவன் கீர்த்தனை தான்

பெண் : போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும்
ஆண் : பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும்
பெண் : எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு
ஆண் : தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு

பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
ஆண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

பெண் : பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
ஆண் : கூட்டை திறந்து ஜோடியுடன்
கூடி கலக்கும் காலமிது
இருவரும் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here