Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Not Known

Female : Illaiyenbaan yaaradaa
Illaiyenbaan yaaradaa
Annai irukkum idam paaradaa
Illaiyenbaan yaaradaa
Annai irukkum idam paaradaa

Female : Ulagin aadhaara jjanani maakaali
Maraiyum melaana agila naayagiyai

Female : Illaiyenbaan yaaradaa
Annai irukkum idam paaradaa

Female : Agala kumari varum kadalum uyar karaiyil
Agila puvanamarul annaiyae
Chorus : Annaiyae…
Female : Nilaiyil oru sirithum thalarvum azhivumilai
Nimalar oli kumari kanniyae….
Chorus : Kanniyae….
Female : Annaiyae kanniyaai minnuvaal
Chorus : Annaiyae kanniyaai minnuvaal

Female : Avalai illaiyenbaan yaaradaa
Annai irukkum idam paaradaa

Female : Mamadurai vaazhum maharaniyae
Bhoomiyil uyir yaavum arul deviyae
Mamadurai vaazhum maharaniyae
Bhoomiyil uyir yaavum arul deviyae

Female : Namaval adi meedhu panivomadaa
Naadiya porul yaavum arulvaaladaa
Namaval adi meedhu panivomadaa
Chorus : Panivomadaa
Female : Naadiya porul yaavum arulvaaladaa
Chorus : Arulvaaladaa

Female : Magaththaana kalaiyarivu edhu kelu athu tharuvaal
Magaththaana kalaiyarivu edhu kelu athu tharuvaal
Ninainthu ninainthu kuzhainthu kuzhainthu
Ulam magizhnthaadu

Female : Illaiyenbaan yaaradaa
Annai illaiyenbaan yaaradaa

Female : Kaanijiyil kamatchi koluviruppaal
Aaa…aa…aa….aa….aa…aa….
Kaanijiyil kamatchi koluviruppaal
Kaasiyil visalatchi thunaiyirupaal
Kaanijiyil kamatchi koluviruppaal
Kaasiyil visalatchi thunaiyirupaal

Female : Kannil karunai pozhinthiduvaal
Annai avarai arinthiduvaal
Mannilae yaavarum annaiyin perarul
Thannilae vaazhgiraar

Female : Illaiyenbaan yaaradaa…
Chorus : Illaiyenbaan yaaradaa….

Female : Thirukadavoorinil abhiramiyaai
Thirukadavoorinil abhiramiyaai
Thigazhpaval kaalanai urundodavae
Thiruppatham veesina kadhal keladaa
Dhinam dhinam thaayinai pugazhvomadaa
Chorus : Dhinam dhinam thaayinai pugazhvomadaa

Female : Vaanaga kathirai maamathi sudarai
Bhoomiyai suzhala vaiththaval yaar
Kaanavarkkum uyar vaanavarkkum
Arul moovarkkum mathi thanthaval yaar

Female : Aadhi thyaapari aanaval yaar
Aayiram aayiram peyarudaiyaal
Theeyinil meviya soodaavaal
Neerinil than thuli thaanaavaal
Neeliyai…
Chorus : Neeliyai…
Female : Sooliyai…
Chorus : Sooliyai
Female : Kaaliyai
Chorus : Kaaliyai
Female : Sakthiyai

Female : Illaiyenbaan yaaradaa
Annai irukkum idam paaradaa
Ulagil
Chorus : Illaiyenbaan yaaradaa……

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : தெரியவில்லை

பெண் : இல்லையென்பான் யாரடா
இல்லையென்பான் யாரடா
அன்னை இருக்கும் இடம் பாரடா
இல்லையென்பான் யாரடா
அன்னை இருக்கும் இடம் பாரடா…

பெண் : உலகின் ஆதார ஜனனி மாகாளி
மறையும் மேலான அகில நாயகியை

பெண் : இல்லையென்பான் யாரடா
அன்னை இருக்கும் இடம் பாரடா

பெண் : அகல குமரி வரும் கடலும் உயர் கரையில்
அகில புவனமருள் அன்னையே…
குழு : அன்னையே…..
பெண் : நிலையில் ஒரு சிறிதும் தளர்வும் அழிவுமில்லை
நிமலர் ஒளி குமரி கன்னியே….
குழு : கன்னியே……
பெண் : அன்னையே கன்னியாய் மின்னுவாள்…
குழு : அன்னையே கன்னியாய் மின்னுவாள்..

பெண் : அவளை இல்லையென்பான் யாரடா
அன்னை இருக்கும் இடம் பாரடா…

பெண் : மாமதுரை வாழும் மகராணியே
பூமியில் உயிர் யாவும் அருள் தேவியே
மாமதுரை வாழும் மகராணியே
பூமியில் உயிர் யாவும் அருள் தேவியே

பெண் : நாமவள் அடி மீது பணிவோமடா
நாடிய பொருள் யாவும் அருள்வாளடா
நாமவள் அடி மீது பணிவோமடா
குழு : பணிவோமடா
பெண் : நாடிய பொருள் யாவும் அருள்வாளடா
குழு : அருள்வாளடா

பெண் : மகத்தான கலையறிவு எது கேளு அது தருவாள்
மகத்தான கலையறிவு எது கேளு அது தருவாள்
நினைந்து நினைந்து குழைந்து குழைந்து
உளம் மகிழ்ந்தாடு

பெண் : இல்லையென்பான் யாரடா
அன்னை இல்லையென்பான் யாரடா…

பெண் : காஞ்சியில் காமாட்சி கொலுவிருப்பாள்
ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆ….
காஞ்சியில் காமாட்சி கொலுவிருப்பாள்
காசியில் விசாலாட்சி துணையிருப்பாள்
காஞ்சியில் காமாட்சி கொலுவிருப்பாள்
காசியில் விசாலாட்சி துணையிருப்பாள்

பெண் : கண்ணில் கருணை பொழிந்திடுவாள்
அன்னை அவரை அறிந்திடுவாள்
மண்ணிலே யாவரும் அன்னையின் பேரருள்
தன்னிலே வாழ்கிறார்

பெண் : இல்லையென்பான் யாரடா……
குழு : இல்லையென்பான் யாரடா……

பெண் : திருக்கடவூரினில் அபிராமியாய்
திருக்கடவூரினில் அபிராமியாய்
திகழ்பவள் காலனை உருண்டோடவே
திருப்பதம் வீசின கதை கேளடா
தினம் தினம் தாயினை புகழ்வோமடா
குழு : தினம் தினம் தாயினை புகழ்வோமடா

பெண் : வானக கதிரை மாமதிச் சுடரை
பூமியை சுழல வைத்தவள் யார்
கானவர்க்கும் உயர் வானவர்க்கும்
அருள் மூவர்க்கும் மதி தந்தவள் யார்
குழு : மூவர்க்கும் மதி தந்தவள் யார்

பெண் : ஆதி தயாபரி ஆனவள் யார்
ஆயிரம் ஆயிரம் பெயருடையாள்
தீயினில் மேவிய சூடாவாள்
நீரினில் தன் துளி தானாவாள்
நீலியை…..
குழு : நீலியை…..
பெண் : சூலியை……
குழு : சூலியை……
பெண் : காளியை….
குழு : காளியை….
பெண் : சக்தியை

பெண் : இல்லையென்பார் யாரடா
அன்னை இருக்கும் இடம் பாரடா
உலகில்
குழு : இல்லையென்பார் யாரடா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here