Singer : Soolamangalam Rajalakshmi

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Piththaagi thottil ondrai
Vilai koduththu vaangi vanthaen
Vaiththaatta pillai illai
Villaikku virkka yaarumillai

Female : Illaatha pillaikku
Naan enna solli thaalaatta
Illaatha pillaikku
Naan enna solli thaalaatta
Eththanaiyo peyar irunthum
Entha peyar naan sootta

Female : Illaathathondrum illai
Irunthum oru pillai illai
Pollaatha deivangal
En pulampalaiyum ketkkavillai

Female : Illaatha pillaikku
Naan enna solli thaalaatta

Female : Karikaraikkum thengaaiyai
Kaiyentha pillaiyillai
Nirai kudaththu thanneerai
Eeandralaiya pillaiyillai

Female : Mazhai peithor vaasalilae
Mann alaiya pillaiyillai
Maakkolam thanai azhikka
Magan ondru enakkillai

Female : Illaatha pillaikku
Naan enna solli thaalaatta

Female : Vaazhai maram kulau thalli
Vaazhntha payan thaan adaiyum…aa…
Kozhiyinam petra payan
Kunjugalaaithaan theriyum….aa….

Female : Paazhum maladi endra pattam pettrathandri
Yaezhai naan enna pettraen
Irul niraintha vaazhkkai ini

Female : Illaatha pillaikku
Naan enna solli thaalaatta
Eththanaiyo peyar irunthum
Entha peyar naan sootta

Female : Illaatha pillaikku
Naan enna solli thaalaatta

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பித்தாகி தொட்டில் ஒன்றை
விலை கொடுத்து வாங்கி வந்தேன்
வைத்தாட்ட பிள்ளை இல்லை
விலைக்கு விற்க யாருமில்லை……..

பெண் : இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
எத்தனையோ பெயர் இருந்தும்
எந்த பெயர் நான் சூட்ட

பெண் : இல்லாததொன்றுமில்லை
இருந்தும் ஒரு பிள்ளை இல்லை
பொல்லாத தெய்வங்கள்
என் புலம்பலையும் கேட்கவில்லை…..

பெண் : இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட

பெண் : கறிகரைக்கும் தேங்காயை
கையேந்த பிள்ளையில்லை
நிறைக் குடத்து தண்ணீரை
ஈன்றலைய பிள்ளையில்லை

பெண் : மழை பெய்தோர் வாசலிலே
மண் அலைய பிள்ளையில்லை
மாக்கோலம் தனை அழிக்க
மகன் ஒன்று எனக்கில்லை……..

பெண் : இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
எத்தனையோ பெயர் இருந்தும்
எந்த பெயர் நான் சூட்ட

பெண் : இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட

பெண் : வாழை மரம் குலைத் தள்ளி
வாழ்ந்த பயன் தான் அடையும்…..ஆ….
கோழியினம் பெற்ற பயன்
குஞ்சுகளாய்தான் திரியும்…..ஆ…..

பெண் : பாழும் மலடி என்ற பட்டம் பெற்றதன்றி
ஏழை நான் என்ன பெற்றேன்
இருள் நிறைந்த வாழ்க்கை இனி

பெண் : இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
எத்தனையோ பெயர் இருந்தும்
எந்த பெயர் நான் சூட்ட

பெண் : இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here