Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : Thoongaiyilae vaangugira moochu
Idhu Suzhimaari ponaalum pochu
Ulutha moongil udal mel minukku poochu
Endra mozhi endrum unmaiyaana pechu..aa..aa..aa..

Male : Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu

Male : Indriruppor naalai ingae
Iruppathenna unmai
Idhai ennidaamal serthu vaithu
Kaathu enna nanmai

Male : Indriruppor naalai ingae
Iruppathenna unmai
Idhai ennidaamal serthu vaithu
Kaathu enna nanmai

Male : Irukum varai inbangalai
Anubavikkum thanmai
Illaiyendraal vaazhvinilae
Unakku yedhu inimai..

Male : Inbamengae …
Inbamengae inbamengae endru thedu

Male : Kanirasamaam mathuvarunthi
Kalippathalla inbam
Kanigaiyarin thunaiyinilae
Kidaippathalla inbam

Male : Kanirasamaam mathuvarunthi
Kalippathalla inbam
Kanigaiyarin thunaiyinilae
Kidaippathalla inbam

Male : Inaiyillaa manaiyaalin
Vaaimozhiyae inbam
Aval idhazh sindhum punnagaiye
Alavillaatha inbam

Male : Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu

Male : Maadi manai kodi panam
Vaaganam veen jambam
Vaazhvinilae oruvanuku
Tharuvathalla inbam

Male : Maadi manai kodi panam
Vaaganam veen jambam
Vaazhvinilae oruvanuku
Tharuvathalla inbam

Male : Mazhalai mozhi vaayamutham
Vazhangum pillaichelvam
Un maar meethu udhaippathilae
Kidaippadhu thaan inbam

Male : Inbamengae …
Inbamengae inbamengae endru thedu
Adhu engirundha pothum athai naadi odu
Inbamengae inbamengae endru thedu

பாடகர்  : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி

ஆண் : தூங்கையிலே வாங்குகிற மூச்சு
இது சுழிமாறிப் போனாலும் போச்சு உலுத்த
மூங்கில் உடல் மேல் மினுக்குப் பூச்சு
என்ற மொழி என்றும் உண்மையான பேச்சு…..ஆ..ஆஅ…

ஆண் : இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு

ஆண் : இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

ஆண் : இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை
இதை எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

ஆண் : இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை……

ஆண் : இன்பமெங்கே ….
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு

ஆண் : கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்

ஆண் : கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்

ஆண் : இணையில்லா மனையாளின்
வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே
அளவில்லாத இன்பம்…..

ஆண் : இன்பமெங்கே ….
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு

ஆண் : மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம்

ஆண் : மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம்

ஆண் : மழலை மொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே
கிடைப்பதுதான் இன்பம்…..

ஆண் : இன்பமெங்கே ….
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here