Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Idhaya Chandran

Male : Intha iravu inba iravu
Indru thodangum anbu uravu
Ilam poovey kaalam veenaaguthae
Idhazh thenootru ennai thaalaattu
Aa….Idhazh thenootru ennai thaalaattu

Female : Intha iravu inba iravu
Indru thodangum anbu uravu

Male : Intha udal kaaman thantha varamo
Intha malar pookkum nanthavanamo
Female : Pulli mayil naanum ungal virunthu
Ullavarai naalum alli arunthu

Male : Paththu viral muththiraigal chiththiram podumo
Female : Idhazh muththamidum saththangalil niththirai odumo
Male : Ilam poovae poovil neeraadumo idai poraada
Female : Hahaah
Male : Idhazh neerada
Female : Hahaah
Male : Idai poraada idhzh neeraada

Female : Intha iravu inba iravu
Indru thodangum anbu uravu

Female : ………..

Male : …………….

Female : Mazhai varum neram mogam erikkum
Saelai thodumpothu thegam kodhikkum
Male : Kaalai varai yaagam ingu nadakkum
Paavai vizhi mooda velli mulaikkum

Female : Vanji idhu konjum varai konjida venumo
Male : Ilam pinju udal anjuvathu nenjukku thonumo
Female : Idhu kaman koyil thaeraanathi
Ini naalthorum
Male : Hmm
Female : Kanni paai podum
Male : Haah
Female : Ini naalthorum kanni paai podum
Male : Aahaah…haa….

Male : Intha iravu inba iravu
Female : Indru thodangum anbu uravu
Male : lam poovey kaalam veenaaguthae
Female : Idhazh thenootru ennai thaalaattu
Male : Aa….Idhazh thenootru ennai thaalaattu

Female : ……………

Male : …………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : இதயசந்திரன்

ஆண் : இந்த இரவு இன்ப இரவு
இன்று தொடங்கும் அன்பு உறவு
இளம் பூவே காலம் வீணாகுதே
இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு
ஆ….இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு

பெண் : இந்த இரவு இன்ப இரவு
இன்று தொடங்கும் அன்பு உறவு

ஆண் : இந்த உடல் காமன் தந்த வரமோ
இந்த மலர் பூக்கும் நந்தவனமோ
பெண் : புள்ளி மயில் நானும் உங்கள் விருந்து
உள்ளவரை நாளும் அள்ளி அருந்து

ஆண் : பத்து விரல் முத்திரைகள் சித்திரம் போடுமோ
பெண் : இதழ் முத்தமிடும் சத்தங்களில் நித்திரை ஓடுமோ
ஆண் : இளம் பூவே பூவில் நீராடுமோ
இடை போராட
பெண் : ஹஹாஹ்…
ஆண் : இதழ் நீராட…
பெண் : ஹஹாஹ்…
ஆண் : இடை போராட இதழ் நீராட…

பெண் : இந்த இரவு இன்ப இரவு
இன்று தொடங்கும் அன்பு உறவு

பெண் : ……………….

ஆண் : ……………………

பெண் : மழை வரும் நேரம் மோகம் எரிக்கும்
சேலை தொடும்போது தேகம் கொதிக்கும்
ஆண் : காலை வரை யாகம் இங்கு நடக்கும்
பாவை விழி மூட வெள்ளி முளைக்கும்

பெண் : வஞ்சி இது கெஞ்சும் வரை கொஞ்சிட வேணுமோ
ஆண் : இளம் பிஞ்சு உடல் அஞ்சுவது நெஞ்சுக்கு தோணுமோ
பெண் : இது காமன் கோயில் தேரானதோ
இனி நாள்தோறும்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : கன்னி பாய் போடும்…
ஆண் : ஹாஹ்…..
பெண் : இனி நாள்தோறும் கன்னி பாய் போடும்…
ஆண் : ஆஹாஹ்…..ஹா

ஆண் : இந்த இரவு இன்ப இரவு
பெண் : இன்று தொடங்கும் அன்பு உறவு
ஆண் : இளம் பூவே காலம் வீணாகுதே
பெண் : இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு
ஆண் : ஆ….இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு

பெண் : ……………………

ஆண் : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here