Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum

Female : Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum

Female : Intha vaanilae paranthu paar
Adhil veru megam varum
intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum

Female : Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum

Female : Oruvanai enni enni
Urugidum pennin kanneer
Oruvanai enni enni
Urugidum pennin kanneer
Paruvaththai kaakkaathu paruva pennae
Thalaivanai konjam paarththu
Thazhuvidum kadhal yaettru
Thalaivanai konjam paarththu
Thazhuvidum kadhal yaettru

Female : Uravinil inbam undu
Sonnaen en kannae
Unakku theriyaaththo
Ulagaththil illaathatho

Female : Kadhal nilaiyaanatho
Kalaigalil ivan mannan
Rasanaiyil ivan mannan

Female : Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum

Female : Kadhalil ivan thaanae kannan andru
Thalaiyanai manjam pottu
Kalainganai nenjil pootti
Shaanthiyil manakkolam kaanbaai indru
Kaalam sirithallavaa kadhal perithallavaa
Mogam sugamallavaa mudivu ulagamallavaa

Female : Intha paadalai paadi paar
Adhil veru paavam varum
Intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum

Female : Intha vaanilae paranthu paar
Adhil veru megam varum
intha maalaiyai soodippar
Adhil veru vaasam varum

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்

பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்

பெண் : இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும்

பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்

பெண் : ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
ஒருவனை எண்ணி எண்ணி
உருகிடும் பெண்ணின் கண்ணீர்
பருவத்தைக் காக்காது பருவப் பெண்ணே
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று
தலைவனை கொஞ்சம் பார்த்து
தழுவிடும் காதல் ஏற்று

பெண் : உறவினில் இன்பம் உண்டு
சொன்னேன் என் கண்ணே
உனக்குத் தெரியாததோ
உலகத்தில் இல்லாததோ

பெண் : காதல் நிலையானதோ
கலைகளில் இவன் மன்னன்
ரசனையில் இவன் மன்னன்

பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்

பெண் : காதலில் இவன் தானே கண்ணன் அன்று
தலையணை மஞ்சம் போட்டு
கலைஞனை நெஞ்சில் பூட்டி
சாந்தியில் மணக்கோலம் காண்பாய் இன்று
காலம் சிறிதல்லவா காதல் பெரிதல்லவா
மோகம் சுகமல்லவா முடிவு உலகல்லவா

பெண் : இந்தப் பாடலைப் பாடிப் பார்
அதில் வேறு பாவம் வரும்
இந்த மாலையை சூடிப்பார்
அதில் வேறு வாசம் வரும்

பெண் : இந்த வானிலே பறந்து பார்
அதில் வேறு மேகம் வரும்
இந்த வாழ்வினை வாழ்ந்து பார்
அதில் வேறு சொர்க்கம் வரும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here