Indha Pazhasa Song Lyrics is song from Thooya Ullam Tamil Film– 1961, Starring Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. Balaji, Savithiri, E. V. Saroja, M. S. Sundaribai and Sandhiya Jayaram. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Udumalai Narayanakavi.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Udumalai Narayanakavi

Male : Indha pazhasa avuthu pottu
Pudhu podava ravikka maattu
Indha pazhasa avuthu pottu
Pudhu podava ravikka maattu
Veliya kelambhu kelambhu
Nee kadhva izhuthu poottu
Kadaveedhi mele povom
Vaa selavukkindhaa nottu

Female : Avasarapadathae atha mavanae
Veenae avasiyam illadha selavu namakku venam

Female : Appan pattan thedi vecha
Highwayzoom namakkillae
Annaada kaayichi naama
Adhukkellaam tharamillae
Aala yeichi pozhaikkum
Kurukku moolaikkoda unakkillae
Avasarapadathae atha mavanae
Veenae avasiyam illadha selavu namakku venam

Male : Ozhaichu thingha udambil namakku balamirukkudhae
Unmaiyodu udhavikkaaga neeyum irukkira
Saami alavilladha kozhandhai selvam koduthirukkudhae
Naambha thalarndha bodhu paadhukaakkum edhukku muzhikkire

Male : Manasu vuttudadhae maaman magale
Pinnae vaadiyamma povom yendi raghala
Kanane manasu vuttudadhae maaman magale

Female : Nammai pola pullaikutti
Naayaai alaiyanuma
Nanum neeyum ponaa naadhi yedhum ondumaa
Unnai pola padikkadha muttaalaagonuma
Yosikkaatti pinnalae mosam aagumae
Maama varushma oru presavam thavaruvathillai
Naanum vathalaaghi poyitten sakthiyum illai
Machaan avasarapadathae atha mavanae

Male : Nadantha varaikkum kadavul sealu nadanthu pochuthu
Naalaiyodu kozhandha kanakku niruthiyachudhu
Namma kudumba nelama therinju selava korachumaachudhu
Pulla kozhandha kuttiya valarkkum vazhiyum purinju pochudhu
Manasu vuttudadhae maaman magale
Vandha varava micham pidippen maaman magale

Both : Kattayama namm naalilae
Kalviyaale pulla kutti meloonganum
Nalla pera avangalaala naama vaanganum

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : இந்த பழச அவுத்து போட்டு
புது பொடவ ரவிக்கை மாட்டு
இந்த பழச அவுத்து போட்டு
புது பொடவ ரவிக்கை மாட்டு
வெளிய கெளம்பு கெளம்பு
நீ கதவ இழுத்து பூட்டு
கடவீதி மேலே போவோம்
வா செலவுக்கிந்தா நோட்டு

பெண் : அவசரப்படாதே அத்த மவனே
வீணே அவசியமில்லாத செலவு நமக்கு வேணாம்…

பெண் : அப்பன் பாட்டன் தேடி வச்ச
ஐவேஜூம் நமக்கில்லே
அன்னாட காய்ச்சி நாம
அதுக்கெல்லாம் தரமில்லே
ஆள ஏய்ச்சிப் பொழைக்கும்
குறுக்கு மூளைக்கூட உனக்கில்லே
அவசரப்படாதே அத்த மவனே
வீணே அவசியமில்லாத செலவு நமக்கு வேணாம்…

ஆண் : ஒழைச்சுத் திங்க உடம்பில் நமக்கு பலமிருக்குதே
உண்மையோடு உதவிக்காக நீயும் இருக்கிறே
சாமி அளவில்லாத கொழந்தை செல்வம் கொடுத்திருக்குதே
நாம்ப தளர்ந்தபோது பாதுகாக்கும் எதுக்கு முழிக்கிறே

ஆண் : மனச வுட்டுடாதே மாமன் மகளே
பின்னே வாடியம்மா போவோம் ஏண்டி ரகள
கண்ணே மனச வுட்டுடாதே மாமன் மகளே

பெண் : நம்மைப் போல புள்ளைக்குட்டி
நாயாய் அலையோணுமா
நானும் நீயும் போனா நாதி ஏதும் ஒண்டுமா
உன்னைப்போல படிக்காத முட்டாளாகோணுமா
யோசிக்காட்டி பின்னாலே மோசம் ஆகுமே
மாமா வருஷம் ஒரு பிரசவம் தவறுவதில்லை
நானும் வத்தலாகி போயிட்டேன் சக்தியுமில்லை
மச்சான் அவசரப்படாதே அத்த மவனே…

ஆண் : நடந்த வரைக்கும் கடவுள் செயலு நடந்து போச்சுது
நாளையோட கொழந்த கணக்க நிறுத்தியாச்சுது
நம்ம குடும்ப நெலம தெரிஞ்சு செலவ கொறச்சுமாச்சுது
புள்ள கொழந்த குட்டிய வளர்க்கும் வழியும் புரிஞ்சு போச்சுது
மனச வுட்டுடாதே மாமன் மகளே
வந்த வரவ மிச்சம் பிடிப்பேன் மாமன் மகளே

இருவரும் : கட்டாயமா நம்ம நாளிலே
கல்வியாலே புள்ளக்குட்டி மேலோங்கணும்
நல்ல பேர அவங்களால நாம வாங்கணும்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here