Singers : S. Janaki and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Intha pennodu piranthathu nadanam
Ival kannodu vilainthathu nalinam
Intha pennodu piranthathu nadanam
Ival kannodu vilainthathu nalinam
Idhil ennodu inai sollum penmai
Ingu ennaalum kidaiyaathu unmai

Female : Intha pennodu piranthathu nadanam
Ivala kannodu vilainthathu nalinam

Female : Aada vanthaal oru azhagu silai
Ival adimaiyendraanathu nadana kalai
Aada vanthaal oru azhagu silai
Ival adimaiyendraanathu nadana kalai
Thedda vanthaal ingu thani perumai
Ival sirpigal sethukkaatha uyir padhumai
Sirpigal sethukkaatha uyir padhumai

Female : Intha pennodu piranthathu nadanam
Ival kannodu vilainthathu nalinam
Idhil ennodu inai sollum penmai
Ingu ennaalum kidaiyaathu unmai

Female : Intha pennodu piranthathu nadanam
Ival kannodu vilainthathu nalinam

Female : Kattu poonguzhal kaattril asainthoru
Pattu paayena kooththaada
Thaththi thaavidum thanga therena
Vanji poongodi vilaiyaada

Female : Velli sendugal thulliyezhunthodu
Alli poovizhi endraada
Vanna thaenkani thaangiya sitridai
Vinnar kodiyena nindraada

Female : Thaththi naan nadakkaiyilae
Thththai pol theriyalaiyyo
Thaavi naan kudhikkaiyilae
Thanga maan inamillaiyo

Female : ……………….

Female : Intha pennodu piranthathu nadanam
Ival kannodu vilainthathu nalinam
Idhil ennodu inai sollum penmai
Ingu ennaalum kidaiyaathu unmai

Female : Intha pennodu piranthathu nadanam
Ival kannodu vilainthathu nalinam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
இதில் என்னோடு இணை சொல்லும் பெண்மை
இங்கு எந்நாளும் கிடையாது உண்மை

பெண் : இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்

பெண் : ஆட வந்தாள் ஒரு அழகுச் சிலை
இவள் அடிமையென்றானது நடனக் கலை
ஆட வந்தாள் ஒரு அழகுச் சிலை
இவள் அடிமையென்றானது நடனக் கலை
தேட வந்தாள் இங்கு தனிப் பெருமை
இவள் சிற்பிகள் செதுக்காத உயிர் பதுமை
சிற்பிகள் செதுக்காத உயிர் பதுமை

பெண் : இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
இதில் என்னோடு இணை சொல்லும் பெண்மை
இங்கு எந்நாளும் கிடையாது உண்மை

பெண் : இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்

பெண் : கட்டுப் பூங்குழல் காற்றில் அசைந்தொரு
பட்டுப் பாயென கூத்தாட
தத்தி தாவிடும் தங்க தேரென
வஞ்சி பூங்கொடி விளையாட

பெண் : வெள்ளிச் செண்டுகள் துள்ளியெழுந்தொரு
அல்லிப் பூவிழி என்றாட
வண்ண தேன்கனி தாங்கிய சிற்றிடை
விண்ணர் கொடியென நின்றாட

பெண் : தத்தி நான் நடக்கையிலே
தத்தை போல் தெரியலையோ
தாவி நான் குதிக்கையிலே
தங்க மான் இனமில்லையோ

பெண் : ………………………………..

பெண் : இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
இதில் என்னோடு இணை சொல்லும் பெண்மை
இங்கு எந்நாளும் கிடையாது உண்மை

பெண் : இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here