Singer : Vani Jairam
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Female : …………….
Female : Indru varum kaattrinilae enna vishaesam
Adhu yaenthi varum vaasanaiyil enna vishaesam
Indru varum kaattrinilae enna vishaesam
Adhu yaenthi varum vaasanaiyil enna vishaesam
Ilamai pudhumai thanimai inimai
Female : Indru varum kaattrinilae enna vishaesam
Adhu yaenthi varum vaasanaiyil enna vishaesam
Female : Vannamazhai megaththilae oviyam undo
Adhu manthil ulla oviyaththai varaivathum undo
Annanadai poduthammaa aattru vellamae
Yaedho aasai valai pattathammaa nadhiyin ullamae
Female : Aalamaram thalaiviriththu nirppathum enna
Oru arasanukku maalaiyida thudippathum enna
Mayakkam kalakkam adharkkum thayakkam
Female : Indru varum kaattrinilae enna vishaesam
Adhu yaenthi varum vaasanaiyil enna vishaesam
Female : ……………….
Female : Kozhiyidam seval ondru konjuvathenna
Rendu kuruvigalum marakkilaiyil pesuvathenna
Thaamarai poo vaanaththaiyae paarpathum enna
Adhai thazhuva vantha sooriyanin jaadhithaan enna
Female : Nyaana kummi paaduvathaen kogilam ellaam
Suga rajabogam nadaththuvathaen thogaigal ellaam
Paruvam uruvam rasanai athigam
Female : Indru varum kaattrinilae enna vishaesam
Adhu yaenthi varum vaasanaiyil enna vishaesam
Female : Nenjil ulla vaarththaikkellaam
Paashaigal undo
Antha ninaivugalai padam pidikkum
Karuviyum undo
Kangalukku ulagaththilae kaavalum undo
Entha kanniyarkkum manathukkullae
Kovilum undo
Female : Inam marantha kulam maarantha panthangal undo
Ingae entha entha ullangalil sonthangal undo
Kelvi naanae padhilum naanae
Female : Indru varum kaattrinilae enna vishaesam
Adhu yaenthi varum vaasanaiyil enna vishaesam….
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ………………………..
பெண் : இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விஷேசம்
இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விஷேசம்
இளமை புதுமை தனிமை இனிமை
பெண் : இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விஷேசம்
பெண் : வண்ணமழை மேகத்திலே ஓவியம் உண்டோ
அது மனதில் உள்ள ஓவியத்தை வரைவதும் உண்டோ
அன்னநடை போடுதம்மா ஆற்று வெள்ளமே
ஏதோ ஆசைவலை பட்டதம்மா நதியின் உள்ளமே
பெண் : ஆலமரம் தலைவிரித்து நிற்பதும் என்ன
ஒரு அரசனுக்கு மாலையிட துடிப்பதும் என்ன
மயக்கம் கலக்கம் அதற்கும் தயக்கம்
பெண் : இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விஷேசம்
பெண் : ………………………………
பெண் : கோழியிடம் சேவல் ஒன்று கொஞ்சுவதென்ன
ரெண்டு குருவிகளும் மரக்கிளையில் பேசுவதென்ன
தாமரைப்பூ வானத்தையே பார்ப்பதும் என்ன
அதை தழுவ வந்த சூரியனின் ஜாதிதான் என்ன
பெண் : ஞான கும்மி பாடுவதேன் கோகிலம் எல்லாம்
சுக ராஜபோகம் நடத்துவதேன் தோகைகள் எல்லாம்
பருவம் உருவம் ரசனை அதிகம்
பெண் : இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விஷேசம்
பெண் : நெஞ்சில் உள்ள வார்த்தைக்கெல்லாம்
பாஷைகள் உண்டோ
அந்த நினைவுகளை படம் பிடிக்கும்
கருவியும் உண்டோ
கண்களுக்கு உலகத்திலே காவலும் உண்டோ
எந்த கன்னியர்க்கும் மனதுக்குள்ளே
கோவிலும் உண்டோ
பெண் : இனம் மறந்த குலம் மறந்த பந்தங்கள் உண்டோ
இங்கே எந்த எந்த உள்ளங்களில் சொந்தங்கள் உண்டோ
கேள்வி நானே பதிலும் நானே
பெண் : இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விஷேசம்…..