Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Inimaiyaanathu antha iraivan pondrathu
Iraivan pondrathu adhu punithamaanathu
Kadhal porul nirainthathu
Porul nirainthathu…..aahaa…..haa…..haa…..

Female : Kadhal enbathu verum kavithai solvathu
Kavithai solvathu kadamai enbathae
Antha kadavul thanthathu
Kadavul thanthathu….m….mm…..mm…..mm….

Male : Mouna kaliyilae mayangum nilaiyilae
Nyaanam peruvathu nandri migunthathu kadhal
Female : Palli vayathilae paruva veriyilae
Thulli vizhuvathu thunbam tharuvathu kadhal

Male : Kannaalae koyil kattum kadhal
Female : Mannaalae veedu kattum kadhal

Male : Inimaiyaanathu antha iraivan pondrathu
Iraivan pondrathu
Female : Kadamai enbathae antha kadavul thanthathu
Kadavul thanthathu

Male : Nenjam ariyavae vanjam puripavar
Nenjai suduvathu neruppaai erivathu kadhal
Female : Ulla thiraiyilae unmai vadivilae
Kallam purivathu kabadam nirainthathu kadhal

Male : Kannaalae koyil kattum kadhal
Female : Mannaalae veedu kattum kadhal

Female : Kadhal enbathu verum kavithai solvathu
Kavithai solvathu
Male : Adhu punithamaanathu kadhal porul nirainthathu
Porul nirainthathu

Male : Kadalgal pirikkalaam kannai maraikkalaam
Udalgal piriyalaam uyirgal inaivathae kadhal
Female : Odi sendra naal udhirntha pookkalae
Thaaliyin mangalam dharmaththin manthiram kadhal

Male : Kannaalae koyil kattum kadhal
Female : Mannaalae veedu kattum kadhal
Male : Kadhal…….kadhal……kadhal……kadhal…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இனிமையானது அந்த இறைவன் போன்றது
இறைவன் போன்றது அது புனிதமானது
காதல் பொருள் நிறைந்தது
பொருள் நிறைந்தது……ஆஹா…ஹா…ஹா…

பெண் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது
கவிதை சொல்வது கடமை என்பதே
அந்த கடவுள் தந்தது
கடவுள் தந்தது…..ம்…ம்.ம்.ம்.

ஆண் : மௌனக் கலையிலே மயங்கும் நிலையிலே
ஞானம் பெறுவது நன்றி மிகுந்தது காதல்
பெண் : பள்ளி வயதிலே பருவ வெறியிலே
துள்ளி விழுவது துன்பம் தருவது காதல்

ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்
பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல்

ஆண் : இனிமையானது அந்த இறைவன் போன்றது
இறைவன் போன்றது
பெண் : கடமை என்பதே அந்த கடவுள் தந்தது
கடவுள் தந்தது…..

ஆண் : நெஞ்சம் அறியவே வஞ்சம் புரிபவர்
நெஞ்சை சுடுவது நெருப்பாய் எறிவது காதல்
பெண் : உள்ளத் திரையிலே உண்மை வடிவிலே
கள்ளம் புரிவது கபடம் நிறைந்தது காதல்

ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்
பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல்

பெண் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது
கவிதை சொல்வது
ஆண் : அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது
பொருள் நிறைந்தது.

ஆண் : கடல்கள் பிரிக்கலாம் கண்ணை மறைக்கலாம்
உடல்கள் பிரியலாம் உயிர்கள் இணைவதே காதல்
பெண் : ஓடிச் சென்ற நாள் உதிர்ந்த பூக்களே
தாலியின் மங்கலம் தர்மத்தின் மந்திரம் காதல்

ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்
பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல்…..
ஆண் : காதல்…….காதல்……காதல்……காதல்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here