Singer : S. P. Balasubrahmanyam

Music by : Auggath

Male : Innaadu namm naadu
Vizhundhu pochu vellaikkaaran valaiyilae
Vandhaargal vendraargal
Alaigal thavazhum madharaasin karaiyilae

Male : Panpaadu ellaamae maaripochu
Namma vaazhkai muraiyilae
Vellaiyoo vellaiyae
Kollaiyoo kollaiyae
Thunbathai yaarumae sollavae illaiyae

Male : Pudhu saalai vasathigal adainthom
Thandavaala rayilgalai adainthom
Minsaara vazhithadam adainthom adainthom

Male : Em koottai kodi maram izhandhom
Em kolgai manamadhai izhandhom
Pon kodi selvangal izhandhom izhandhom

Chorus : …………………..

Male : En vaanum mannum vanigamaai ponadhae
Engal arumaiyum perumaiyum arasiyal aanadhae

Male : Ezhai dhesam endraargalae
Kozhai dhesam endraanadhae
Velum vaalum yendhi vazhndha
Inam viraiyaaga ponadhae

Male : Sindhum vervai ingae ingae
Selvam ellaam angae angae
Kizhakkin maarbil kurudhi kudithu kondu
Merkku valarkiragathae

Male : Ada vellai nari singangalai aandathennavo
Siru vetil koottam
Engal koottai meindhadhennavoo
Paarukkum oorukkum thangathai kodutha inam
Parukkaikku alaivadhenna

Male : Kadalgalin meenai mattum naam padithom
Kadalaiyum karaiyaiyum avan pidithaan
Karaigalil manidharkku valai virithaan
Chennaiyil madharas cityai amaithaan

Male : Em dhesam meendum theeviram kaanuma
Engal adimaiyin thazhumbugal muzhumaiyaai maaruma

Male : Paalum thaenum aaraaguma
Paazhum kanneer aaraaguma
Nammai naamae aazhum dhesam idhu
Indru uyir peruma

Male : Ooran aatchi oor ponadhum
Oozhal oozhal oor aazhudhae
Nammai naamae aazhum dhesamidhu
Naalai valam peruma

Male : Vanjagamum poimaigalum pogattumae
Vaaimai enum thaaimai mannai aazhattumae
Indhiya indhiya ezhundhu nimirnthadhendru
Ivvulagam vaazhthattumae

Male : Jana gana mana enum dhesakkuralae
Janagalin kural endru olikattumae
Saritharam perumaigal thirumbattumae
Brittanum namadhu perumai pesumae

Indhiya indhiya indhiya indhiya

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஆகத்

ஆண் : இந்நாடு நம் நாடு விழுந்து போச்சு
வெள்ளைக்காரன் வலையிலே
வந்தார்கள் வென்றார்கள்
அலைகள் தவழும் மதராசின் கரையிலே

ஆண் : பண்பாடு எல்லாமே மாறிப்போச்சு
நம்ம வாழ்க்கை முறையிலே
வெள்ளையோ வெள்ளையே
கொள்ளையோ கொள்ளையே
துன்பத்தை யாருமே சொல்லவே இல்லையே

ஆண் : புதுச் சாலை வசதிகள் அடைந்தோம்
தண்டவாள ரயில்களை அடைந்தோம்
மின்சார வழித்தடம் அடைந்தோம்…அடைந்தோம்

ஆண் : எம் கோட்டைக் கொடி மரம் இழந்தோம்
எம் கொள்கை மனமதை இழந்தோம்
பொன் கோடி செல்வங்கள் இழந்தோம்…இழந்தோம்

குழு : .……………………..

ஆண் : என் வானும் மண்ணும் வணிகமாய்ப் போனதே
எங்கள் அருமையும் பெருமையும் அரசியல் ஆனதே

ஆண் : ஏழை தேசம் என்றார்களே
கோழை தேசம் என்றானதே
வேலும் வாளும் ஏந்தி வாழ்ந்த இனம்
விரையாகப் போனதே

ஆண் : சிந்தும் வேர்வை இங்கே இங்கே
செல்வம் எல்லாம் அங்கே அங்கே
கிழக்கின் மார்பில் குருதி குடித்துக் கொண்டு
மேற்கு வளர்கிறதே…….

ஆண் : அட வெள்ளை நரி சிங்கங்களை
ஆண்டதென்னவோ
சிறு விட்டில் கூட்டம்
எங்கள் காட்டை மேய்ந்ததென்னவோ
பாருக்கும் ஊருக்கும் தங்கத்தைக் கொடுத்த இனம்
பருக்கைக்கு அலைவதென்ன

ஆண் : கடல்களின் மீனை மட்டும் நாம் பிடித்தோம்
கடலையும் கரையையும் அவன் பிடித்தான்
கரைகளில் மனிதர்க்கு வலை விரித்தான்
சென்னையில் மதராஸ் சிட்டியை அமைத்தான்

ஆண் : எம் தேசம் மீண்டும் தீவிரம் காணுமா
எங்கள் அடிமையின் தழும்புகள் முழுமையாய் மாறுமா

ஆண் : பாலும் தேனும் ஆறாகுமா
பாழும் கண்ணீர் ஆறாகுமா
நம்மை நாமே ஆளும் தேசமிது
இன்று உயிர் பெறுமா

ஆண் : ஊரான் ஆட்சி ஊர் போனதும்
ஊழல் ஊழல் ஊர் ஆளுதே
நம்மை நாமே ஆளும் தேசமிது
நாளை வளம் பெறுமா

ஆண் : வஞ்சகமும் பொய்மைகளும் போகட்டுமே
வாய்மை எனும் தூய்மை மண்ணை ஆளட்டுமே
இந்தியா இந்தியா எழுந்து நிமிர்ந்ததென்று
இவ்வுலகம் வாழ்த்தட்டுமே

ஆண் : ஜன கண மண எனும் தேசக்குரலே
ஜனங்களின் குரல் என்று ஒலிக்கட்டுமே
சரித்திரம் பெருமைகள் திரும்பட்டுமே
பிரிட்டன்னும் நமது பெருமை பேசுமே

ஆண் : இந்தியா இந்தியா இந்தியா இந்தியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here