Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Irandu kiligal saernthu nadaththum
Inba kadhal naadagam
Oo….indru thodangum kaaviyam
Female : Irandu kiligal saernthu nadaththum
Inba kadhal naadagam
Oo….indru thodangum kaaviyam
Female : Thiranda paruvm aadi paadum
Sittu kuruvi oviyam
Oo….thiranda paruvam aadi paadum
Sittu kuruvi oviyam
Serum sugangal aayiram
Female : Irandu kiligal saernthu nadaththum
Inba kadhal naadagam
Oo….indru thodangum kaaviyam
Female : Iraivan potta vithiyin
Kottil idhuvum oru veedu
Thalaivi ingae thunaivan engae
Naduvil oru kodu
Female : Ingae aadal paadal sarasa koodal
Nadana pennodu
Amma idhuvum panpaadu
Amma idhuvum panpaadu
Female : Thanga padhumai angam muzhuthum thazhuvum kairasi
Thazhuvi thazhuvi thannai maranthu mayakkum magarasi
Ingae koodal illai shanthi illai
Kungumam poosi amma paavam ival rasi
Amma paavam ival rasi
Female : Ulla poruththam udalum porutham
Ondru saernthaarkal urakkam indri
Vidiya vidiya magizhnthu vaazhnthaargal
Ingae thaali ondrae intha kazhuththu
Thaanga vaiththaargal paavam yaenga vaiththaargal
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்
இன்பக் காதல் நாடகம்
ஓ….இன்று தொடங்கும் காவியம்..
பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்
இன்பக் காதல் நாடகம்
ஓ….இன்று தொடங்கும் காவியம்..
பெண் : திரண்ட பருவம் ஆடிப் பாடும்
சிட்டுக் குருவி ஓவியம்
ஓ…..திரண்ட பருவம் ஆடிப் பாடும்
சிட்டுக் குருவி ஓவியம்
சேரும் சுகங்கள் ஆயிரம்…….
பெண் : இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்
இன்பக் காதல் நாடகம்
ஓ….இன்று தொடங்கும் காவியம்..
பெண் : இறைவன் போட்ட விதியின்
கோட்டில் இதுவும் ஒரு வீடு
தலைவி இங்கே துணைவன் எங்கே
நடுவில் ஒரு கோடு
பெண் : இங்கே ஆடல் பாடல் சரஸக் கூடல்
நடனப் பெண்ணோடு….
அம்மா இதுவும் பண்பாடு……..
அம்மா இதுவும் பண்பாடு……..
பெண் : தங்கப் பதுமை அங்கம் முழுதும் தழுவும் கைராசி
தழுவி தழுவி தன்னை மறந்து மயக்கும் மகராசி
இங்கே கூடல் இல்லை சாந்தி இல்லை
குங்குமம் பூசி அம்மா பாவம் இவள் ராசி……
அம்மா பாவம் இவள் ராசி…..
பெண் : உள்ளப் பொருத்தம் உடலும் பொருத்தம்
ஒன்று சேர்ந்தார்கள் உறக்கம் இன்றி
விடிய விடிய மகிழ்ந்து வாழ்ந்தார்கள்
இங்கே தாலி ஒன்றே இந்தக் கழுத்து
தாங்க வைத்தார்கள் பாவம் ஏங்க வைத்தார்கள்