Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Iravil parthen irandu nilavu
Iravil parthen irandu nilavu
Vaanil ondru neril ondru
Female : Intha nilavu unathu aatchi
Intha nilavu unathu aatchi
Antha nilavu idharkku saatchi

Male : Iravil parthen irandu nilavu
Male : Vaanil ondru neril ondru

Male : Nee en kai meettum veenaiyadi
Vaa en katcheri velaiyadi
Nee en kai meettum veenaiyadi
Vaa en katcheri velaiyadi

Female : Viral kaanattumae suga paavangal
Avai podattumae isai kolangal
Viral kaanattumae suga paavangal
Avai podattumae isai kolangal

Male : Naadhamum geethamum sangamam
Female : Naayagan naayagi sammatham

Male : Iravil parthen irandu nilavu
Female : Vaanil ondru neril ondru

Female : Thaen en kannaththil thenguvatho
Nee un vaai kondu vaanguvatho
Thaen en kannaththil thenguvatho
Nee un vaai kondu vaanguvatho

Male : Oru vandaagavo adhai kondaada
Madhu undaalenna malar chendaada
Oru vandaagavo adhai kondaada
Madhu undaalenna malar chendaada

Female : Konja naal aanapin konjalaam
Male : Antha naal entha naal kaanalaam

Male : Iravil parthen irandu nilavu
Female : Vaanil ondru neril ondru
Male : Iravil parthen irandu nilavu
Female : Vaanil ondru neril ondru

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
வானில் ஒன்று நேரில் ஒன்று
பெண் : இந்த நிலவு உனது ஆட்சி
இந்த நிலவு உனது ஆட்சி
அந்த நிலவு இதற்கு சாட்சி……..

ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று

ஆண் : நீ என் கை மீட்டும் வீணையடி
வா என் கச்சேரி வேளையடி
நீ என் கை மீட்டும் வீணையடி
வா என் கச்சேரி வேளையடி

பெண் : விரல் காணட்டுமே சுக பாவங்கள்
அவை போடட்டுமே இசைக் கோலங்கள்
விரல் காணட்டுமே சுக பாவங்கள்
அவை போடட்டுமே இசைக் கோலங்கள்

ஆண் : நாதமும் கீதமும் சங்கமம்
பெண் : நாயகன் நாயகி சம்மதம்

ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று

பெண் : தேன் என் கன்னத்தில் தேங்குவதோ
நீ உன் வாய் கொண்டு வாங்குவதோ
தேன் என் கன்னத்தில் தேங்குவதோ
நீ உன் வாய் கொண்டு வாங்குவதோ

ஆண் : ஒரு வண்டாகவோ அதை கொண்டாட
மது உண்டாலென்ன மலர்ச் செண்டாட
ஒரு வண்டாகவோ அதை கொண்டாட
மது உண்டாலென்ன மலர்ச் செண்டாட

பெண் : கொஞ்ச நாள் ஆனபின் கொஞ்சலாம்
ஆண் : அந்த நாள் எந்த நாள் காணலாம்

ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று
ஆண் : இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
பெண் : வானில் ஒன்று நேரில் ஒன்று


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here