Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : {Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda} (2)

Male : Sutrukindrathae thendral dhinam dhinam
Enthan manathai konjam sumakkumo
Vimmukindrathae vinnil natchathiram
Enthan kanavai solli azhaikkumo
Achacho achacho

Male : Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda

Male : Vaazhkai ennum payanam ingae
Dhooram dhooram
Engae maarum engae serum
Sollum kaalam

Male : Thendral vanthu pookkal aadum
Athuvoru kaalam
Mannil sinthi pookal vaadum
Ilaiyuthir kaalam

Male : Kolangal aadum vaasalgal vendum
Thaniyaaga azhagillaiyae
Kadalai seraa nadhiyai kandaal
Tharaiyil aadum meenai kandaal
Otrai kuyilin sogam kandaal
Achachchoo…ooo….

Male : Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda

Male : Veesum kaatru oivai thedi
Engae pogum
Pookal pesa vaai irunthal
Enna pesum

Male : Maalai neram paravai kootam
Koottai thedum
Paravi ponaal paravai koodu
Yaarai thedum

Male : Nadodi megam ododi ingae
Yaarodu uravaadumo
Annaiyillaa pillai kandaal
Pillailaa annai kandaal
Anbaeillaa ulagam kandaal
Achachchoo…ooo….

Male : Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda

Male : Sutrukindrathae thendral dhinam dhinam
Enthan manathai konjam sumakkumo
Vimmukindrathae vinnil natchathiram
Enthan kanavai solli azhaikkumo
Achachooo…oooo.. achacho

Male : Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட} (2)

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட

ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே
தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும்
சொல்லும் காலம்

ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்
அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்
இலையுதிர் காலம்

ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்
தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால்
தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட

ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி
எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால்
என்ன பேசும்

ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்
கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு
யாரைத் தேடும்

ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே
யரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளை கண்டால்
பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பேயில்லா உலகம் கண்டால்
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here