Singer : P. Susheela

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Pulamaipithan

Female : Irubathu vayathenum ilamaiyil dhinam
Arupathu kalaigalai arivathae sugam
Vaazhvil endrum orae tharam varum
Orae tharam tharum

Female : Thaanum sugathai peruvathillai
Yaarum peravum viduvathillai
Paalaivanathil mazhai thulipol
Veenae ilamai kazhavathenna

Female : Acham enna rasikka
Vetkam enna suvaikka
Micham enna namakku
Ulaginil irukku…

Female : Irubathu vayathenum ilamaiyil dhinam
Arupathu kalaigalai arivathae sugam

Female : …………..

Female : Neerum unakku sudugirathu
Theeyum enakku kulirkirathu
Kaalai urakkam varugirathu
Maalai ilamai vidikkirathu

Female : Etti nindraal nerungum
Kitta sendraal ilagum
Rendungettaan
Ulagam thedi thantha sorkkam

Female : Irubathu vayathenum ilamaiyil dhinam
Arupathu kalaigalai arivathae sugam

Female : Yaehae parthaal veliyil uravirukkum
Aanaal manathil pirivirikkum
Yaedho ulagam nadakkirathu
Yaeno adhaiyum madhikkirathu

Female : Pattu methai virikkum
Palliyarai irukkum
Nenjam angae thavikkum
Kadhai enna kadhaiyo

Female : Irubathu vayathenum ilamaiyil dhinam
Arupathu kalaigalai arivathae sugam
Vaazhvil endrum orae tharam varum
Orae tharam varum

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது கலைகளை அறிவதே சுகம்
வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்
ஒரே தரம் தரும்…..

பெண் : தானும் சுகத்தை பெறுவதில்லை
யாரும் பெறவும் விடுவதில்லை
பாலைவனத்தில் மழைத் துளிப்போல்
வீணே இளமை கழிவதென்ன

பெண் : அச்சம் என்ன ரசிக்க
வெட்கம் என்ன சுவைக்க
மிச்சம் என்ன நமக்கு
உலகினில் இருக்கு…..

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது கலைகளை அறிவதே சுகம்

பெண் : …………………..

பெண் : நீரும் உனக்கு சுடுகிறது
தீயும் எனக்கு குளிர்கிறது
காலை உறக்கம் வருகிறது
மாலை இளமை விடிக்கிறது

பெண் : எட்டி நின்றால் நெருங்கும்
கிட்டச் சென்றால் விலகும்
ரெண்டுங்கெட்டான்
உலகம் தேடி தந்த சொர்க்கம்

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது கலைகளை அறிவதே சுகம்

பெண் : ஏஹே பார்த்தால் வெளியில் உறவிருக்கும்
ஆனால் மனதில் பிரிவிருக்கும்
ஏதோ உலகம் நடக்கிறது
ஏனோ அதையும் மதிக்கிறது

பெண் : பட்டு மெத்தை விரிக்கும்
பள்ளியறை இருக்கும்
நெஞ்சம் அங்கே தவிக்கும்
கதை என்ன கதையோ

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்
அறுபது கலைகளை அறிவதே சுகம்
வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்
ஒரே தரம் வரும்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here