Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female : Laaalaaalaaalaaa
Male : Haa ha ha ha
Female : Laaalaaalaaalaaa
Male : Lalalalalalalala laala laa

Male : Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam
Female : Pani maedai meedhu paadhangal
Thappi podum inba thaalangal
Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam

Female : Ilamaiyil sandhikkum
Male : Irumanam sindhikkum
Female : Ninaivugal thithikkum
Male : Kavidhaiyil varnikkum
Female : Kalaikoodam namakkaaga uruvaanadho
Indha kalaikooda namakkaaga uruvaanadho

Male : Pala kodi ennam puriyaadha vannam
Pala kodi ennam puriyaadha vannam
Kalai konjam kannodu kadhai pesaadhoo

Male : Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam

Male : Idhayamum vetkikkum
Female : Ilamaiyil ottikkum
Male : Panimalar kannukkul
Female : Pala vagai vairangal
Male : Vilai poda mudiyatha silai allavoo
Idhu vilai poda mudiyatha silai allavoo

Female : Kodiyaadum pandhal mudiyaamal mella
Kodiyaadum pandhal mudiyaamal mella
Sathiraadi varum bodhu sugam allavoo

Male : Haa aa haa aa
Female : Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam

Female : Avaravar sorgangal
Male : Avaravar pakkathil
Female : Sila sila sirppangal
Male : Siri siri vetkathil
Female : Ilam maangal arasaalum saamraajiyam
Idhu ilam maangal arasaalum saamraajiyam

Male : Manimaadam undu malar manjam undu
Manimaadam undu malar manjam undu
Avaiyaavum manam serum thirunaalidhu

Both : Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : லாலாலாலாலாலா
ஆண் : ஹா ஹா ஹா ஹா
பெண் : லாலாலாலாலாலா
ஆண் : லாலாலா லாலா லா

ஆண் : இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்
பெண் : பனி மேடை மீது பாதங்கள்
தப்பிப் போடும் இன்ப தாளங்கள்
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

பெண் : இளமையில் சந்திக்கும்
ஆண் : இருமனம் சிந்திக்கும்
பெண் : நினைவுகள் தித்திக்கும்
ஆண் : கவிதையில் வர்ணிக்கும்
பெண் : கலைக்கூட நமக்காக உருவானதோ
இந்தக் கலைக்கூட நமக்காக உருவானதோ

ஆண் : பலகோடி எண்ணம் புரியாத வண்ணம்
பலகோடி எண்ணம் புரியாத வண்ணம்
கலைக் கொஞ்சும் கண்ணோடு கதை பேசுதோ

ஆண் : இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

ஆண் : இதயமும் வெட்கிக்கும்
பெண் : இளமையில் ஒட்டிக்கும்
ஆண் : பனிமலர் கண்ணுக்குள்
பெண் : பல வகை வைரங்கள்
ஆண் : விலை போட முடியாத சிலை அல்லவோ
இது விலை போட முடியாத சிலை அல்லவோ

பெண் : கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
சதிராடி வரும்போது சுகமல்லவோ

ஆண் : ஹா ஆ…ஆஅ ….ஆஅ

பெண் : இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

பெண் : அவரவர் சொர்க்கங்கள்
ஆண் : அவரவர் பக்கத்தில்
பெண் : சில சில சிற்பங்கள்
ஆண் : சிரி சிரி வெட்கத்தில்
பெண் : இளமான்கள் அரசாளும் சாம்ராஜ்ஜியம்
இது இளமான்கள் அரசாளும் சாம்ராஜ்ஜியம்

ஆண் : மணிமாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
மணிமாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
அவையாவும் மனம் சேரும் திருநாளிது

இருவர் : இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here