Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Ival oru illangkuruvi
Ezhunthu aadum malarkodi
Idayil nadaiyil
Iraivan varaintha kolam
Thavazhnthidum malai aruvi
Paranthu paadum pasungili
Nitham nitham nitham
Nadai thathi thathi pazhagum

Female : Ival oru illangkuruvi
Ezhunthu aadum malarkodi

Female : Kaal pogum pokil
Manam pogum naalil
Kidayathu thadaipoda mulvelithan
Naan pogum pathai
Nizhal pola kooda
Varugindra poongkatrum
En thozhithan

Female : Neenda thoram oodum megam
Yaarai thedutho
Neerillaamal vaadum enthan
Oorai thedutho

Female : Naanum ennai
Kelviketkum naal ithu
Thiru naal ithu
Ival oru illangkuruvi
Ezhunthu aadum malarkodi

Female : Naan paadum pattu
Thalaiyatti kettu
Dhinam thorum
Poo pookum thottangalae
Neerodai meedhu
Nodi pozhuthil paainthu
Iraithedum sennarai kootangalae

Female : Aalam vizhuthil
Oonjal pottu aatam aaduven
Aaval theera thaalam pottu
Pattu paaduven

Female : Venirkalam vaazhthu koorum
Naal ithu
Thiru naal ithu

Female : Ival oru illangkuruvi
Ezhunthu aadum malarkodi
Idayil nadaiyil
Iraivan varaintha kolam
Thavazhnthidum malai aruvi
Paranthu paadum pasungili
Nitham nitham nitham
Nadai thathi thathi pazhagum

Female : Ival oru illangkuruvi
Ezhunthu aadum malarkodi

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில்
இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி
பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்..
நடை தத்தி தத்தி பழகும்

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி

பெண் : கால் போகும் போக்கில்..
மனம் போகும் நாளில்..
கிடையாது தடை போட
முள்வேலிதான்
நான் போகும் பாதை..
நிழல் போல கூட..
வருகின்ற பூங்காற்றும்
என் தோழிதான்

பெண் : நீண்ட தூரம் ஓடும் மேகம்
யாரை தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்தன்
ஊரை தேடுதோ
நானும் என்னை
கேள்வி கேட்கும் நாள் இது..
திரு நாள் இது..

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி

பெண் : நான் பாடும் பாட்டு..
தலையாட்டி கேட்டு..
தினம் தோறும் பூ பூக்கும்
தோட்டங்களே
நீரோடை மீது
நொடி பொழுதில் பாய்ந்து
இரை தேடும்
செந்நாரை கூட்டங்களே

பெண் : ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு
ஆட்டம் ஆடுவேன்
ஆவல் தீர தாளம் போட்டு
பாட்டு பாடுவேன்

பெண் : வேனிற்காலம் வாழ்த்து கூறும்
நாள் இது..
திரு நாள் இது..

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில்
இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி
பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்..
நடை தத்தி தத்தி பழகும்

பெண் : இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்கொடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here