Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyricist : Vairamuthu

Female : Kalaimagal vaazhgavae
Chorus : Vaazhgavae
Female : Kalaigalum vaazhgavae
Chorus : Vaazhgavae
Female : Nalamellaam soozhgavae
Chorus : Soozhgavae
Female : Puviyinai aalgavaey
Chorus : Aalgavey
Female : Aaa…..aaa…..aaa….aa….aa….

Chorus : Thaa….thaa….thaththiththaam thaththiththaam
Sasasaniga….sasasaniga….sasasaniga….
Sasasanigasa sasasanigasa sasasanigasa

Female : Ivaloru pournami
Isai tharum kanmani
Swaram tharum sundhari

Female : Ivaloru pournami
Chorus : Aaa….aa…..aa….
Female : Isai tharum kanmani
Chorus : Aaa….aa…..aa….
Female : Swaram tharum sundhari
Chorus : Sanitha

Female : Ivalin raagangalil Iravum vidigirathu
Jadhiyin osaigalil vaanam asaigirathu
Pazhagum swarangal ivalin varangal
Isaiyin mazhaiyil kadalum malaiyum nanainthidum

Female : Ivaloru pournami
Chorus : Aaa….aa…..aa….
Female : Isai tharum kanmani
Chorus : Aaa….aa…..aa….
Female : Swaram tharum sundhari
Chorus : Sanitha

Female : Ivaloru pournami pournami pournami

Chorus : Thathjam thajam thathjam thajam thathjam thajam
Thathjam thajam thathjam thajam thathjam thajam

Female : Padhasa
Chorus : Aa….aa….
Female : Thasani
Chorus : Aa….aaa….
Female : Thasani
Chorus : Aa….aaa….

Female : Aadaththaan ingae piravi eduththaen
Kalaimagal Padhaththil enai koduththaen
Raaga raajaangam naane padaiththaen
Idhayaththil thaalaththin padham paninthaen

Female : Kamasa
Chorus : Aa….aaa….
Female : Sagani
Chorus : Aa….aaa….
Female : Madhanisa
Chorus : Aa….aaa….
Female : Thanisaga
Chorus : Aa….aaa….
Female : Nisagama
Chorus : Aa….aaa….
Thathaninisasagaga sasaninithathapapa

Female : Jadhigal padiyathum nadhigalum nagarnthathu
Imaigal aadiyathum paravaigal paranthathu
Puvigal yaezhum ival viralgalil vilainthathu
Kavigal yaavum ival Vizhigalil ezhunthathu

Female : Ulagam ivalin arangam kalaiyin surangam
Kavithai arangam irunthum
Ivalathu manathirkkul azhugindra ninaivugal
Adhai solla mozhiyillai vazhiyillai

Female : Ivaloru pouranami isai tharum kannmani
Swaram tharum sundhari
Ivaloru pournami pournami pournami

Female : Kannam thannil kandaenaiyyaa
Kanneer seitha kaayam
Aadum pothum paadum pothum
Aarum kaayam aarum

Female : Medai meedhu kaanam paadi konum
Kaalam seitha kolam ingae
Kanneer thaanae minjum….
Chorus : Aa…..aaa….

Female : Kodhai enthan koondhal meedhu megam vanthu thunjum
Angae vanthu aada sollo
Sorkkam ennai konjum

Female : Idhayam dhinamum mezhugaai urugum
Chorus : Idhayam dhinamum mezhugaai urugum
Female : Urangum pozhuthinil kanavum karugum
Chorus : Urangum pozhuthinil kanavum karugum

Female : Kanneerilae en kaaviyam
Thindaaduthae pennoviyam
Kalaimagalae sugam tharum isai ondrey nirantharam

Female : Pudhiya kanavu dhinamum ezhunthu vara
Pazhaiya uravu vizhiyil kasinthu vara
Chorus : Sasakanisakathni mathathaka mathani
Nisasathaninimatha kamasa sagamaga

Female : Isaiyenum mazhaithanil vazhinthathu pudhu rasam
Chorus : Sasamamasasakaka ninisasakakasaa
Female : Ivalathu asaivinil vilainthathu navarasam
Chorus : Sasamamasasagaga ninisanithanisa

Female : Dhisaigal muzhuthum isaigal pozhiyum
Ivaloru pournami
Vizhiyil irandu oligal mozhiyum
Ivaloru pournami
Nadana sabhaiyil dhinamum ulavum
Ivaloru pournami
Aa….aaa….aa….aa….aaa….aa….

Female : Ivaloru pouranami isai tharum kannmani
Swaram tharum sundhari

Female : Ivaloru pournami
Chorus : Aaa….aa…..aa….
Female : Isai tharum kanmani
Chorus : Aaa….aa…..aa….
Female : Swaram tharum sundhari
Chorus : Sanitha

Female : Ivalin raagangalil Iravum vidigirathu
Jadhiyin osaigalil vaanam asaigirathu
Pazhagum swarangal ivalin varangal
Isaiyin mazhaiyil kadalum malaiyum nanainthidum

Female : Ivaloru pournami pournami pournami……

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடலாசிரியர்  : வைரமுத்து

பெண் : கலைமகள் வாழ்கவே
குழு : வாழ்கவே
பெண் : கலைகளும் வாழ்கவே
குழு : வாழ்கவே
பெண் : நலமெல்லாம் சூழ்கவே
குழு : சூழ்கவே
பெண் : புவியினை ஆள்கவே
குழு : ஆள்கவே….
பெண் : ஆஆ……ஆஆ……ஆஆ….ஆ…..ஆ……

குழு : தா…தா…தத்தித்தாம் தத்தித்தாம்….
ஸஸஸநிக….ஸஸஸநிக…. ஸஸஸநிக
ஸஸஸநிகஸ ஸஸஸநிகஸ ஸஸஸநிகஸ……

பெண் : இவளொரு பௌர்ணமி
இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி…..

பெண் : இவளொரு பௌர்ணமி
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : இசை தரும் கண்மணி…
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : ஸ்வரம் தரும் சுந்தரி….
குழு : ஸநித….

பெண் : இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது
ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது
பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள்
இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும்

பெண் : இவளொரு பௌர்ணமி
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : இசை தரும் கண்மணி…
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : ஸ்வரம் தரும் சுந்தரி….
குழு : ஸநித….

பெண் : இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி

குழு : தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம்
தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம்

பெண் : பதஸ…..
குழு : ஆ…..ஆ…
பெண் : தஸநி…..
குழு : ஆ….ஆஆ……
பெண் : தநிஸ…
குழு : ஆ….ஆஆ……

பெண் : ஆடத்தான் இங்கே பிறவி எடுத்தேன்
கலைமகள் பாதத்தில் எனைக் கொடுத்தேன்
ராக ராஜாங்கம் நானே படைத்தேன்
இதயத்தில் தாளத்தின் பதம் பணிந்தேன்

பெண் : கமஸ
குழு : ஆ….ஆஆ……
பெண் : ஸகநி
குழு : ஆ….ஆஆ……
பெண் : மதநிஸ
குழு : ஆ….ஆஆ……
பெண் : தநிஸக
குழு : ஆ….ஆஆ……
பெண் : நிஸகம
குழு : ஆ….ஆஆ……
ததநிநிஸஸகக ஸஸநிநிததபப

பெண் : ஜதிகள் பாடியதும் நதிகளும் நகர்ந்தது
இமைகள் ஆடியதும் பறவைகள் பறந்தது
புவிகள் ஏழும் இவள் விரல்களில் விளைந்தது
கவிகள் யாவும் இவள் விழிகளில் எழுந்தது

பெண் : உலகம் இவளின் அரங்கம் கலையின் சுரங்கம்
கவிதை அரங்கம் இருந்தும்
இவளது மனதிற்குள் அழுகின்ற நினைவுகள்
அதை சொல்ல மொழியில்லை வழியில்லை

பெண் : இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி…
ஸ்வரம் தரும் சுந்தரி….
இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி..

பெண் : கன்னம் தன்னில் கண்டேனய்யா
கண்ணீர் செய்த காயம்
ஆடும் போதும் பாடும் போதும்
ஆறும் காயம் ஆறும்

பெண் : மேடை மீது கானம் பாடி கொஞ்சும்
காலம் செய்த கோலம் இங்கே
கண்ணீர் தானே மிஞ்சும்….
குழு : ஆ…..ஆஆ…

பெண் : கோதை எந்தன் கூந்தல் மீது மேகம் வந்து துஞ்சும்
அங்கே வந்து ஆடச் சொல்லி
சொர்க்கம் என்னை கெஞ்சும்

பெண் : இதயம் தினமும் மெழுகாய் உருகும்
குழு : இதயம் தினமும் மெழுகாய் உருகும்
பெண் : உறங்கும் பொழுதினில் கனவும் கருகும்
குழு : உறங்கும் பொழுதினில் கனவும் கருகும்

பெண் : கண்ணீரிலே என் காவியம்
திண்டாடுதே பெண்ணோவியம்
கலைகளே சுகம் தரும் இசை ஒன்றே நிரந்தரம்

பெண் : புதிய கனவு தினமும் எழுந்து வர
பழைய உறவு விழியில் கசிந்து வர
குழு : ஸஸகநிஸகதநி மததகமதநி
நிஸஸதநிநிமத கமஸ ஸகமக

பெண் : இசையெனும் மழைதனில் வழிந்தது புது ரசம்
குழு : ஸஸமமஸஸகக நிநிஸஸககஸா
பெண் : இவளது அசைவினில் விளைந்தது நவரசம்
குழு : ஸஸமமஸஸகக நிநிஸநிதநிஸ

பெண் : திசைகள் முழுதும் இசைகள் பொழியும்
இவளொரு பௌர்ணமி
விழியில் இரண்டு ஒளிகள் மொழியும்
இவளொரு பௌர்ணமி
நடன சபையில் தினமும் உலவும்
இவளொரு பௌர்ணமி….
ஆ….ஆஆ…..ஆ….ஆ….ஆஆ…..ஆ…

பெண் : இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி…..

பெண் : இவளொரு பௌர்ணமி
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : இசை தரும் கண்மணி…
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : ஸ்வரம் தரும் சுந்தரி….
குழு : ஸநித….

பெண் : இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது
ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது
பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள்
இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும்

பெண் : இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here