Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : T. R. Pappa
Lyrics by : Mayavanathan
Male : Ivaloru azhagiya poonjittu
Vayasu eerombadhu padhinettu
Udal adhu pani vilum malar mottu pesum
Vovvoru sollum thaen sottu
Male : Ivaloru azhagiya poonjittu
Vayasu eerombadhu padhinettu
Female : Ivarukku vayasu moovettu
Pongi ilamai sathiradum udar kattu
Vizhiyadhu kooriya vaal vettu
Naan vilaiyaadum maarbhu poonthattu
Female : Ivarukku vayasu moovettu
Pongi ilamai sathiradum udar kattu
Male : Sithira poovadi samandhi
Ival sirikkira azhagu sevvendhi
Sithira poovadi samandhi
Ival sirikkira azhagu sevvendhi
Nettriyilae thundu nilavendhi
Ingu nerungudhamma alli poochendu
Female : Thaamarai poomugam sivappera
Ingu thallaadum kaal konjam ilaipaara
Thaamarai poomugam sivappera
Ingu thallaadum kaal konjam ilaipaara
Unnilam maarbil idam undaa
Indha kanniyai thanga manam undaa
Kanniyai thanga manam undaa
Male : Ivaloru azhagiya poonjittu
Vayasu eerombadhu padhinettu
Female : Ivarukku vayasu moovettu
Pongi ilamai sathiradum udar kattu
Male : Muthamil kavidhai pinnattum
Female : Ingu moovagai kaniyum sindhattum
Male : Muthamil kavidhai pinnattum
Female : Ingu moovagai kaniyum sindhattum
Both : Ilamaiyum inimaiyum nilaikattum
Ingu iruvarukkum idam kidaikattum
Iruvarukkum idam kidaikattum
Ahaa..ahaa..aahaa..lalallalalala….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : மாயவநாதன்
ஆண் : இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு
உடலது பனி விழும் மலர் மொட்டு-பேசும்
ஒவ்வொரு சொல்லும் தேன் சொட்டு
ஆண் : இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு
பெண் : இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
விழியது கூரியவாள் வெட்டு
நான் விளையாடும் மார்பு பூந்தட்டு……
பெண் : இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
ஆண் : சித்திரப் பூவடி சாமந்தி
இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
சித்திரப் பூவடி சாமந்தி
இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
நெற்றியிலே துண்டு நிலவேந்தி
இங்கு நெருங்குதம்மா அல்லிப் பூச்செண்டு
பெண் : தாமரைப் பூமுகம் சிவப்பேற
இங்கு தள்ளாடும் கால் கொஞ்சம் இளைப்பாற
தாமரைப் பூமுகம் சிவப்பேற
இங்கு தள்ளாடும் கால் கொஞ்சம் இளைப்பாற
உன்னிளம் மார்பில் இடம் உண்டா
இந்தக் கன்னியைத் தாங்க மனம் உண்டா….
ஆண் : இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு
பெண் : இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
ஆண் : முத்தமிழ் கவிதை பின்னட்டும்
பெண் : இங்கு மூவகைக் கனியும் சிந்தட்டும்
ஆண் : முத்தமிழ் கவிதை பின்னட்டும்
பெண் : இங்கு மூவகைக் கனியும் சிந்தட்டும்
இருவர் : இளமையும் இனிமையும் நிலைக்கட்டும்
இங்கு இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்..
ஆஹா…..ஆஹா…..ஆஹா…..லாலாலாலா…….