Jagam Pugazhum Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by P. Susheela and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Susheela and P. Leela
Music Director : Ghantasala
Lyricist : A. Maruthakasi
Female Chorus : Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Female Chorus : Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye
Female : Ha…aa.. aa.. aa..
Female Chorus : Ha…aa.. aa.. aa..
Female Chorus : Ha…aa.. aa.. aa..
Igapara sugamellaam adainthidalame
Intha kadhai kettkum ellarume
Igapara sugamellaam adainthidalame
Intha kadhai kettkum ellarume
Inikuthu naavellaam uraithidum podhile
Inikuthu naavellaam uraithidum podhile
Inaiye illatha kaaviyamaagum
Female Chorus : Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Female : Aayothi mannan dhsarathanin arunthavathaal
Avan manaivi kousalya kaikeayi sumithirai
Karuvinile uruvaanaar raama laxkhmanar
Kanivulla barathan sathrukknar naalvar
Female Chorus : Aa.. aa.. aa..
Naatnar pottrave naalvarum palakalai
Aatralum adaiya mannan valarthu vanthaane
Kaatinil kousigan yaagathai kaakkave
Kanmani raamlaxkshmanarai anupinane
Kanmani raamlaxkshmanarai anupinane
Female Chorus : Thaadakai Subaahuvai tharayinil veezhthiye
Thavasigal yaagam kaathu aasi kondanare
Thaadakai Subaahuvai tharayinil veezhthiye
Thavasigal yaagam kaathu aasi kondanare
Paadhayil agaligai saabathai theerthapin
Paadhayil agaligai saabathai theerthapin
Seerperum mithilai nagar naadi sendranare
Female Chorus : Veedhiyil sendridum pothole raaman
Sethaiyai kannimaada meethile kandaan
Veedhiyil sendridum pothole raaman
Sethaiyai kannimaada meethile kandaan
Kaadhalinaal iruvar kangalum kalanthana
Kaadhalinaal iruvar kangalum kalanthana
Kanniyai vilodithe sonthamum kondaan
Female : Aanavathaal arivizhantha Parasuraman
Aganthaithanai adakki raman vettri kondaan
Arum puthalvan veerathai kanda mannan
Alavilla aanatha nilayai kandaan….
Female Chorus : Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye
Female Chorus : Mannavan dhasarathan kanmani ramanukku
Manimudi soottavae naal kurithaane
Haa… aa.. aa.. aa.. aa.. Haa.. aa.. aa..
Manavan dhasarathan kanmani ramanukku
Manimudi soottave naal kurithaane
Makkal yavarum magizhvudan nagaraiye
Magara Thoranathaal alangarithaare
Female Chorus : Mantharai Pothanyaal manam maari kaikaeyi
Manimudi barathan soodi naattai aalavum
Vanathil raaman pathinaankaandugal vaazhavum
mannanidam varamthu kaettaal
Female : Antha sollai keatta mannar
Marana moorchai adaintha pinnar
Ramanaiyum azhaikka seithaal
Female : Thanthaiyunai vanam pogach solli
Thambi barathanukku magudathai thanthaar endraal
Female Chorus : Sanjalamillamal anjalavannanum
Samatham thaaye ena vanangi sendraan
Minjiya koobathaal vegunde villedutha
Thambi ilakkuvanai saanthamaakkinaan
Female Chorus : Ilaiyavanum jaanakiyum nizhal pol thodarave
Maravuri thrithu raaman solvathai kandu
Ilaiyavanum jaanakiyum nizhal pol thodarave
Maravuri thrithu raaman solvathai kandu
kalangi naattu makkal kanneer sinthiye
Haa… aa.. aa.. aa.. aa.. Haa.. aa.. aa.. aa..
kalangi naattu makkal kanneer sinthiye
Muraiyalla povathendru thaduthanar sendru
Female Chorus : Aaruthal kooriye kaarmugil vannan
Anbudan
avargalidam vidayum kondaane
Annaiyum thanthaiyum sonna sol kaakkave
Annalum kaankathai naadi sendraane…
Female Chorus : Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye
Ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye
Female : Gangaikarai athiban panbil uyarntha gugan
Anbaal raamabiran nanbannaakinaan
Gangaikarai athiban panbil uyarntha gugan
Anbaal raamabiran nanbannaakinaan
Female : Panjavadi sollum paadhayai kaattinaan
Panjavadi sollum paadhayai kaattinaan
Anjana vannan angu sendru thanginaan
Female Chorus : Anjana vannan angu sendru thanginaan
Female : Ravananin thangai kodiyaval soorppanagai
Raamabiran meedhu maiyal kondaal
Female chorus : Ravananin thangai kodiyaval soorppanagai
Raamabiran meedhu maiyal kondaal
Kobam konda ilaiyon koorambaal avalai
Manabangam seidhu viratti vittaan
Female Chorus : Thangayil bothanayaal thasakanna ravanan
Janaki deviyai siraieduthaan
Thangayil bothanayaal thasakanna ravanan
Janaki deviyai siraieduthaan
Female : Nenjam kanlaagi kangal kulamaagi
Female : Thambiyudan deviyai thedi sendraan
Female : Raaman thedi sendraan
Female : Vazhyil jadayuvaal vivaramellam arinthaan
Female : vaayu mainthan anumanin natpai kondaan
Female : Azhiyai thaandiye ilangai sendra anumaan
Female : Annaiyai asokavanthil kandaan…
Female Chorus : Raamasaamiyin thoothan naanada
Raavana endraan
Raamasaamiyin thoothan naanada
Raavana endraan
Anuman lanakapuriyai theekku iraiyaaki
Kishkinthai sendraan
Kandean annaiyai endre raamanai
Sevithe nindraan
Kadalai kadanthu annal vaanara senaiyudan sendraan
Female Chorus : Vibeeshannin natppai kondaan
Raavananai vendraan
Veeramaatha janaki deviyai theekulikka seithaan
Karpin kanalai kanivudan ettru aayothi nagar meendaan
Karpin kanalai kanivudan ettru aayothi nagar meendaan
Kalangiya makkal kalippura raaman arasurimai kondaan
Arasurimai kondaan…..aa..aa…aa…
Female Chorus : Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye ungal
Sevi kulira paadiduvom kelungal ithaiye
Jagam pugazhum punniya kathai
Raamanin kadhaiye
Female : Atho sri raama chandira prabhu
Female Chorus : Sir raaghavam dhasarathatmajam aprameyam
Seethapadhim
raghukulaanmyaikmeyam
Aajaanubaagum aravintha thalaya thaadcham
Raamam nisasara vinaasagaram namaami…!
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண்கள் : ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
பெண்கள் : ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
பெண் : ஹா….ஆஅ..ஆஅ..
பெண் : ஹா…ஆஆ
பெண்கள் : ஹா…ஆஅ..ஆஅ
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்…
பெண்கள் : ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
பெண் : அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்
பெண்கள் : ஆ…ஆ..ஆ..
நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
பெண்கள் : தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெறும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
பெண்கள் : வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்தே சொந்தமும் கொண்டான்
பெண் : ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்……
பெண்கள் : ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே
ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே
பெண்கள் : மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ..
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
பெண்கள் : மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும்
மன்னனிடம் வரமது கேட்டாள்
பெண் : அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
பெண் : தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
பெண்கள் : சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்
பெண்கள் : இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதைக் கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வதைக் கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ..
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
முறையல்ல போவதென்று தடுத்தனர் சென்று
பெண்கள் : ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே….
பெண்கள் : ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே
பெண்கள் : ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே
பெண் : கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பெண் : பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சன வண்ணன் அங்கு சென்று தங்கினான்
பெண்கள் : அஞ்சன வண்ணன் அங்கு சென்று தங்கினான்
பெண் : ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
பெண்கள் : ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
பெண்கள் : தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
பெண் : நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
பெண் : தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
பெண் : ராமன் தேடிச் சென்றான்
பெண் : வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
பெண் : வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
பெண் : ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
பெண் : அன்னையை அசோகவனத்தில் கண்டான்…
பெண் : ஹா…ஆ….ஆ…ஆ.
பெண்கள் : ராமசாமியின் தூதன் நானடா
ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி
கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை
சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
பெண்கள் : விபீஷணனின் நட்பைக் கொண்டான்
ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்…..ஆ…..ஆ…..ஆ……
பெண்கள் : ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை
இராமனின் கதையே
பெண் : அதோ ஸ்ரீ ராமா சந்திரா பிரபு
பெண்கள் : ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி……….!