Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Janaganin magalai manamagalaaga
Raman ninaithirunthaan
Rajaraman ninaithirunthaan

Female : Aval suyamvaram kolla
Mannavar silarum
Midhilaikku vandhirundhaar
Midhilaikku vandhirundhaar

Female : Janaganin magalai manamagalaaga
Raman ninaithirunthaan
Rajaraman ninaithirunthaan

Female : Nenjai maraithaal ninaivai maraithaal
Kangalai maraikkavillai
Aval manjal mugathil odiya kanneer
Maraithum maraiya villai
Munivan mun puram sreeraman pinpuram
Seethai thaniyidam aval sindhai avanidam

Female : Mannavar ellaam suyam varam naadi
Mandapam vandhu vittar
Oru mannavan yaaro villai eduthaan
Janaki kalangi vittaal

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜனகனின் மகளை மணமகளாக
ராமன் நினைத்திருந்தான்
ராஜாராமன் நினைத்திருந்தான்

பெண் : அவள் சுயம்வரம் கொள்ள
மன்னவர் சிலரும்
மிதிலைக்கு வந்திருந்தார்
மிதிலைக்கு வந்திருந்தார்

பெண் : ஜனகனின் மகளை மணமகளாக
ராமன் நினைத்திருந்தான்
ராஜாராமன் நினைத்திருந்தான்

பெண் : நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர்
மறைத்தும் மறையவில்லை
முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

பெண் : மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி
மண்டபம் வந்து விட்டார்
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கி விட்டாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here