Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : Janaganin magalai manamagalaaga
Raman ninaithirunthaan
Janaganin magalai manamagalaaga
Raman ninaithirunthaan
Rajaraman ninaithirunthaan
Female : Aval suyamvaram kolla
Mannavar silarum
Midhilaikku vandhirundhaar
Aval suyamvaram kolla
Mannavar silarum
Midhilaikku vandhirundhaar
Midhilaikku vandhirundhaar
Female : Janaganin magalai manamagalaaga
Raman ninaithirunthaan
Rajaraman ninaithirunthaan
Female : Mani muthu maanikka madathil irunthu
Jaanaki paarthirunthaal
Mani muthu maanikka madathil irunthu
Jaanaki paarthirunthaal
Iru mai vizhi sivakka malaradi kothikka
Ramanai thedi nindraal
Iru mai vizhi sivakka malaradi kothikka
Ramanai thedi nindraal
Naanam oru puram aasai oru puram
Kavalai maru puram aval nilamai thiripuram
Female : Kothikindra moochu maalaiyil vilunthu
Maniyum karugiyathe
Aval koonthalil irundha malarum
Janaki nilamaiku urugiyadhae
Female : Janaganin magalai manamagalaaga
Raman ninaithirunthaan
Female : Nenjai maraithaal ninaivai maraithaal
Kangalai maraikkavillai
Nenjai maraithaal ninaivai maraithaal
Kangalai maraikkavillai
Aval manjal mugathil odiya kanneer
Maraithum maraiya villai
Munivan mun puram sreeraman pinpuram
Seethai thaniyidam aval sindhai avanidam
Female : Mannavar ellaam suyam varam naadi
Mandapam vandhu vittar
Oru mannavan yaaro villai eduthaan
Janaki kalangi vittaal
Janaki kalangi vittaal
Female : Janaganin magalai manamagalaaga
Raman ninaithirunthaan
Rajaraman ninaithirunthaan
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஜனகனின் மகளை மணமகளாக
ராமன் நினைத்திருந்தான்
ஜனகனின் மகளை மணமகளாக
ராமன் நினைத்திருந்தான்
ராஜாராமன் நினைத்திருந்தான்
பெண் : அவள் சுயம்வரம் கொள்ள
மன்னவர் சிலரும்
மிதிலைக்கு வந்திருந்தார்
அவள் சுயம்வரம் கொள்ள
மன்னவர் சிலரும்
மிதிலைக்கு வந்திருந்தார்
மிதிலைக்கு வந்திருந்தார்
பெண் : ஜனகனின் மகளை மணமகளாக
ராமன் நினைத்திருந்தான்
ராஜாராமன் நினைத்திருந்தான்
பெண் : மணி முத்து மாணிக்க மாடத்தில் இருந்து
ஜானகி பார்த்திருந்தாள்
மணி முத்து மாணிக்க மாடத்தில் இருந்து
ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க
ராமனைத் தேடி நின்றாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க
ராமனைத் தேடி நின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம்
கவலை மறுபுறம் அவள் நிலைமை திரிபுரம்
பெண் : கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து
மணியும் கருகியதே
அவள் கூந்தலில் இருந்த மலரும்
ஜானகி நிலைமைக்கு உருகியதே
பெண் : ஜனகனின் மகளை மணமகளாக
ராமன் நினைத்திருந்தான்
பெண் : நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை
நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர்
மறைத்தும் மறையவில்லை
முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்
பெண் : மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி
மண்டபம் வந்து விட்டார்
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கி விட்டாள்
ஜானகி கலங்கி விட்டாள்…
பெண் : ஜனகனின் மகளை மணமகளாக
ராமன் நினைத்திருந்தான்
ராஜாராமன் நினைத்திருந்தான்