Singers : T. M. Soundararajan and Chorus

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Sri rama jeyam
Sri rama jeyam
Sri rama jeyam

Male : Janakiyin nayaganae
Ramachanthiraa sri ramachnthiraa
Dharumam jeyikkum endru sonnavanae
Ramachanthiraa sri ramachanthiraa

Chorus : Janakiyin nayaganae
Ramachanthiraa sri ramachnthiraa
Dharumam jeyikkum endru sonnavanae
Ramachanthiraa sri ramachanthiraa

Male : Nee naadaala varavendum intha naalilae
Nedungaadaala ponavanae annaalilae
Chorus : Nee naadaala varavendum intha naalilae
Nedungaadaala ponavanae annaalilae

Male and Chorus :
Janakiyin nayaganae
Ramachanthiraa sri ramachnthiraa
Dharumam jeyikkum endru sonnavanae
Ramachanthiraa sri ramachanthiraa

Male : Thanthai sollai meeravillai dasarathan pillai
Nee dasarathan pillai
Indru thagappan sollai madhippathillai
Tharuthalaipillai
Sila tharuthalaipillai

Male : Oru pizhaiyum puriyaamal padhavi vittu sendraai
Adhai bharathan kaiyil thanthaai raamaa
Oru pizhaiyum puriyaamal padhavi vittu sendraai
Adhai bharathan kaiyil thanthaai

Male : Indru thavarukku mael thavaru izhaippor
Dharmam idhu endraar
Vaazhvil tharam uyranthu nindraar

Chorus : Nee naadaala varavendum intha naalilae
Nedungaadaala ponavanae annaalilae

Male : Kosalairama
Chorus : Kodhandarama
Male : Anantharama
Chorus : Ayoththi rama
Male : Seedharama
Chorus : Rajarama
Male and Chorus :
Adiyavar manam vaadalamaa

Male and Chorus :
Janakiyin nayaganae
Ramachanthiraa sri ramachnthiraa
Dharumam jeyikkum endru sonnavanae
Ramachanthiraa sri ramachanthiraa

Male : Thambi endru veru jaadhi maganai sonnaayae
En thambi endru veru jaadhi maganai sonnaayae
Antha guganai sonnaayae
Indru nooru jaathi nooru bedham naattil irukku
Pesum pechil irukku

Male : Raavanin thambikku nee vaakku koduththaai
Pattam sootti mudiththaai rama
Raavanin thambikku nee vaakku koduththaai
Pattam sootti mudiththaai rama
Indru aalukkoru vaakkuruthi naalum koduththaar
Adhai kaattril viduththaar

Chorus : Nee naadaala varavendum intha naalilae
Nedungaadaala ponavanae annaalilae

Male : Kosalairama
Chorus : Kodhandarama
Male : Anantharama
Chorus : Ayoththi rama
Male : Seedharama
Chorus : Rajarama
Male and Chorus :
Adiyavar manam vaadalamaa

Male and Chorus :
Janakiyin nayaganae
Ramachanthiraa sri ramachnthiraa
Dharumam jeyikkum endru sonnavanae
Ramachanthiraa sri ramachanthiraa

Male : Sooriyanin vamsaththilae vanthavan neeyae
Vaari thanthavan neeyae
Nee saththiya thaai pettreduththa pillaiyallavaa
Anbin ellaiyallavaa

Male : Anil mudhugil moondru kodu pottavan neeyae
Anbai kaaththavan neeyae sri rama
Anil mudhugil moondru kodu pottavan neeyae
Anbai kaaththavan neeyae sri rama
Maadham moondru murai mazhai pozhiya nee varuvaayae
Adharkku vazhi vaguppaayae….

Chorus : Nee naadaala varavendum intha naalilae
Nedungaadaala ponavanae annaalilae

Chorus : Kosalairama
Kodhandarama
Anantharama
Ayoththi rama
Seedharama
Rajarama
Adiyavar manam vaadalamaa

Male and Chorus :
Janakiyin nayaganae
Ramachanthiraa sri ramachnthiraa
Dharumam jeyikkum endru sonnavanae
Ramachanthiraa sri ramachanthiraa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஸ்ரீராம ஜெயம்….
ஸ்ரீராம ஜெயம்…..
ஸ்ரீராம ஜெயம்……

ஆண் : ஜானகியின் நாயகனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா
தருமம் ஜெயிக்கும் என்று சொன்னவனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா

குழு : ஜானகியின் நாயகனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா
தருமம் ஜெயிக்கும் என்று சொன்னவனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா

ஆண் : நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே
நெடுங்காடாள போனவனே அந்நாளிலே
குழு : நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே
நெடுங்காடாள போனவனே அந்நாளிலே

ஆண் மற்றும் குழு :
ஜானகியின் நாயகனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா
தருமம் ஜெயிக்கும் என்று சொன்னவனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா

ஆண் : தந்தை சொல்லை மீறவில்லை தசரதன் பிள்ளை
நீ தசரதன் பிள்ளை
இன்று தகப்பன் சொல்லை மதிப்பதில்லை
தறுதலைப்பிள்ளை
சில தறுதலைப்பிள்ளை

ஆண் : ஒரு பிழையும் புரியாமல் பதவி விட்டு சென்றாய்
அதை பரதன் கையில் தந்தாய் ராமா….
ஒரு பிழையும் புரியாமல் பதவி விட்டு சென்றாய்
அதை பரதன் கையில் தந்தாய்

ஆண் : இன்று தவறுக்கு மேல் தவறு இழைப்போர்
தர்மம் இது என்றார்
வாழ்வில் தரம் உயர்ந்து நின்றார்…….

குழு : நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே
நெடுங்காடாள போனவனே அந்நாளிலே……

ஆண் : கோசலைராமா….
குழு : கோதண்டராமா……..
ஆண் : அனந்தராமா……..
குழு : அயோத்தி ராமா…….
ஆண் : சீதாராமா………
குழு : ராஜாராமா…….
ஆண் மற்றும் குழு :
அடியவர் மனம் வாடலாமா………

ஆண் மற்றும் குழு :
ஜானகியின் நாயகனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா
தருமம் ஜெயிக்கும் என்று சொன்னவனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா

ஆண் : தம்பி என்று வேறு ஜாதி மகனை சொன்னாயே
என் தம்பி என்று வேறு ஜாதி மகனை சொன்னாயே
அந்த குகனை சொன்னாயே
இன்று நூறு ஜாதி நூறு பேதம் நாட்டில் இருக்கு
பேசும் பேச்சில் இருக்கு

ஆண் : ராவணனின் தம்பிக்கு நீ வாக்கு கொடுத்தாய்
பட்டம் சூட்டி முடித்தாய் ராமா……..
ராவணனின் தம்பிக்கு நீ வாக்கு கொடுத்தாய்
பட்டம் சூட்டி முடித்தாய்
இன்று ஆளுக்கொரு வாக்குறுதி நாளும் கொடுத்தார்
அதை காற்றில் விடுத்தார்……….

குழு : நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே
நெடுங்காடாள போனவனே அந்நாளிலே……

ஆண் : கோசலைராமா….
குழு : கோதண்டராமா……..
ஆண் : அனந்தராமா……..
குழு : அயோத்தி ராமா…….
ஆண் : சீதாராமா………
குழு : ராஜாராமா…….
ஆண் மற்றும் குழு :
அடியவர் மனம் வாடலாமா………

ஆண் மற்றும் குழு :
ஜானகியின் நாயகனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா
தருமம் ஜெயிக்கும் என்று சொன்னவனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா

ஆண் : சூரியனின் வம்சத்திலே வந்தவன் நீயே
வாரி தந்தவன் நீயே
நீ சத்திய தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா
அன்பின் எல்லையல்லவா

ஆண் : அணில் முதுகில் மூன்று கோடு போட்டவன் நீயே
அன்பை காத்தவன் நீயே ஸ்ரீ ராமா
அணில் முதுகில் மூன்று கோடு போட்டவன் நீயே
அன்பை காத்தவன் நீயே
மாதம் மூன்று முறை மழை பொழிய நீ வருவாயே
அதற்கு வழி வகுப்பாயே……….

குழு : நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே
நெடுங்காடாள போனவனே அந்நாளிலே……

குழு : கோசலைராமா….
கோதண்டராமா……..
அனந்தராமா……..
அயோத்தி ராமா…….
சீதாராமா………
ராஜாராமா…….
அடியவர் மனம் வாடலாமா………

ஆண் மற்றும் குழு : ஜானகியின் நாயகனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா
தருமம் ஜெயிக்கும் என்று சொன்னவனே
ராமச்சந்திரா ஸ்ரீராமச்சந்திரா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here