Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Jananam oru vazhi maranam pala vazhi
Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi
Jananam oru vazhi maranam pala vazhi
Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi
Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi

Male : Ivalukkoru thaai irundhaal andha naalilae
Pin ivalum oru thaai aanaal vandha naalilae
Andha thaaikku kolliyida aan magan illai
Indru indha thaaiku kolli vaikka ival magan illai

Male : Jananam oru vazhi maranam pala vazhi
Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi

Male : Oru maganai pirinthavarkku marumagan vanthaan
Andha marumaganae thirumaganaai mandhiram sonnaan
Irudhi varai varubavarae uravinar endraar
Andha iraivanukku aduthavanaai marumagan nindraan

Male : Jananam oru vazhi maranam pala vazhi
Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi

Male : Kattilukku sondhakaaran kattil pottaan
Thottilukku sonthakkaaran mattam pottaan
Kattai idhan sondhakaaran kaditham pottaan
Kattai idhan sondhakaaran kaditham pottaan
Kadasikaala sondhakaaran satti eduthaan

Male : Pathu maadham sumandha annai tholil eduthaal
Avan pathu nimisham neram mattum payanam koduthaan
Pathu maadham sumandha annai tholil eduthaal
Avan pathu nimisham neram mattum payanam koduthaan
Ethanaiyo aasaiyudan maganai valarthaal
Indru engirunthoo sondham vanthu tholgal koduthaar

Male : Alliyittaal uravukendru alliyum ittaar
Arisiyittaal uravukkendru arisiyum ittaar
Kolliyittaal adupukkendru kolliyum ittaar
Kodiyilae ondru endru veedu nadanthaar

Male : Jananam oru vazhi maranam pala vazhi
Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi
Saalaiyilae ketppadho paasam ennum thaai mozhi

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி

ஆண் : இவளுக்கொரு தாய் இருந்தாள் அந்நாளிலே
பின் இவளும் ஒரு தாய் ஆனாள் வந்த நாளிலே
அந்த தாய்க்கு கொள்ளியிட ஆண் மகன் இல்லை
இன்று இந்த தாய்க்கு கொள்ளி வைக்க இவள் மகன் இல்லை

ஆண் : ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி

ஆண் : ஒரு மகனைப் பிரிந்தவர்க்கு மருமகன் வந்தான்
அந்த மருமகனே திருமகனாய் மந்திரம் சொன்னான்
இறுதிவரை வருபவரே உறவினர் என்றார்
அந்த இறைவனுக்கு அடுத்தவனாய் மருமகன் நின்றான்

ஆண் : ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி

ஆண் : கட்டிலுக்கு சொந்தக்காரன் கட்டில் போட்டான்
தொட்டிலுக்கு சொந்தக்காரன் மட்டம் போட்டான்
கட்டை இதன் சொந்தக்காரன் கடிதம் போட்டான்
கட்டை இதன் சொந்தக்காரன் கடிதம் போட்டான்
கடைசிகால சொந்தக்காரன் சட்டி எடுத்தான்

ஆண் : பத்துமாதம் சுமந்து அன்னை தோளில் எடுத்தாள்
அவன் பத்து நிமிஷம் நேரம் மட்டும் பயணம் கொடுத்தான்
பத்துமாதம் சுமந்து அன்னை தோளில் எடுத்தாள்
அவன் பத்து நிமிஷம் நேரம் மட்டும் பயணம் கொடுத்தான்
எத்தனையோ ஆசையுடன் மகனை வளர்த்தாள் இன்று
எங்கிருந்தோ சொந்தம் வந்து தோள்கள் கொடுத்தார்

ஆண் : அள்ளியிட்டாள் உறவுக்கென்று அள்ளியும் இட்டார்
அரிசியிட்டாள் உறவுக்கென்று அரிசியும் இட்டாள்
கொள்ளியிட்டாள் அடுப்புக்கென்று கொள்ளியும் இட்டாள்
கோடியிலே ஒன்று என்று வீடு நடந்தாள்

ஆண் : ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here