Singer : Boney Chakravathy

Music by : Bharathwaj

Male : Jee boomba
Hey hey jee boomba
Enthan dhevadhaiyai
Nee kaattu

Male : Kaattinaal
Kaadhal koottinaal
Avalai kumbiduven
Poo pottu

Male : Unnai ninaithu pennae
Uyir vittuvittenae
Kaadhalukkudhaan
Ennai vitru vittenae

Male : Unnai adaiven endrae
Yeman vittu vaithaanae
Unnuyiril ennai
Katti vaithaanae

Male : Mazhaiyil nanaindha
Kaagidham pola
Enathu dhegam aagiya pothum
Unnai naan adaivadhu sathiyam

Chorus : Ohooooo….

Male : Jee boomba
Hey hey jee boomba
Enthan dhevadhaiyai
Nee kaattu…uuu….

Chorus : Ohooo…oohooo..ooooo
Ohooo…oohooo..ooooo

Male : En mugathai ninaippaai
Antha yekkathaiyum rasippaai
En ul unarvu
Yetho solludhadi…eee…

Male : Raathiriyil yezhuvaai
Nee ragasiyamaai azhuvaai
Endra karpanaigal
Ennai kolludhadi…ee…

Male : Paasam ulla malarae
Ilam thalirae
Unnai kaanaavidil
Vizhigal kuzhigal dhaanadi

Male : Unnai kandupidippen
Uyir inippen
Adhil aiyamillai
Ulagam urundai dhaanadi…ee…

Male : Kaatru mandalam yeri
Unnai mannil thedi paarppen
Nee vetru giragham ponaal
Naan maatru vazhiyil varuven
Unnai naan adaivadhu sathiyam

Male : Irandu kangal irukka
Naan entha dhisaiyai alakka
Adi melum sila
Kangal vendumadi

Male : Ettu kangal irunthaal
Naan naangu dhisaigal alappen
Unnai eppadiyum
Kangal kaanumadi

Male : Kai adakka nilavae
Kadhir azhagae
Nee yengae… yengae
Kaatrai anuppi thedinen

Male : Kan imaikkum pozhudhil
Nee maraindhaal
Enna aagum endru
Thookkathai thookkil yetrinen

Male : Vinnil eriyum kallo
Antha vinnai kadappadhillai
Mannil ulavum neeyo
Endrum ennai kadappadhillai
Unnai naan adaivadhu sathiyam

Chorus : Ohooo..oo..ohoo..
Ohooo…ooooohooo

Male : Jee boomba
Hey hey jee boomba
Enthan dhevadhaiyai
Nee kaattu

Male : Kaattinaal
Kaadhal koottinaal
Avalai kumbiduven
Poo pottu

Male : Unnai ninaithu pennae
Uyir vittuvittenae
Kaadhalukkudhaan
Ennai vitru vittenae

Male : Unnai adaiven endrae
Yeman vittu vaithaanae
Unnuyiril ennai
Katti vaithaanae

Male : Mazhaiyil nanaindha
Kaagidham pola
Enathu dhegam aagiya pothum
Unnai naan adaivadhu sathiyam

Chorus : Ohooooo….

Chorus : Ohooo..oo..ohoo..
Ohooo…ooooohooo

பாடகர் : போனி சக்ரவர்த்தி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஜீ பூம்பா ஹே
ஹே ஜீ பூம்பா எந்தன்
தேவதையை நீ காட்டு

ஆண் : காட்டினால்
காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன்
பூ போட்டு

ஆண் : உன்னை நினைத்து
பெண்ணே உயிர் விட்டு
விட்டேனே காதலுக்கு
தான் என்னை விற்று
விட்டேனே

ஆண் : உன்னை அடைவேன்
என்றே எமன் விட்டு வைத்தானே
உன்னுயிரில் என்னை கட்டி
வைத்தானே

ஆண் : மழையில் நனைந்த
காகிதம் போல எனது தேகம்
ஆகிய போதும் உன்னை நான்
அடைவது சத்தியம்

குழு : ஓஹோ

ஆண் : ஜீ பூம்பா ஹே
ஹே ஜீ பூம்பா எந்தன்
தேவதையை நீ காட்டு

குழு : ஓஹோ ஓஹோ
ஓஓஓஓ ஓஹோ ஓஹோ
ஓஓஓஓ

ஆண் : என் முகத்தை
நினைப்பாய் அந்த
ஏக்கத்தையும் ரசிப்பாய்
என் உள் உணர்வு ஏதோ
சொல்லுதடி

ஆண் : ராத்திரியில் எழுவாய்
நீ ரகசியமாய் அழுவாய் என்ற
கற்பனைகள் என்னை
கொல்லுதடி

ஆண் : பாசம் உள்ள மலரே
இளம் தளிரே உன்னை
காணாவிடில் விழிகள்
குழிகள் தானடி

ஆண் : உன்னை கண்டு
பிடிப்பேன் உயிர் இனிப்பேன்
அதில் ஐயமில்லை உலகம்
உருண்டை தானடி

ஆண் : காற்று மண்டலம் ஏறி
உன்னை மண்ணில் தேடி
பார்ப்பேன் நீ வேற்று கிரகம்
போனால் நான் மாற்று வழியில்
வருவேன் உன்னை நான்
அடைவது சத்தியம்

ஆண் : இரண்டு கண்கள்
இருக்க நான் எந்த திசையை
அளக்க அடி மேலும் சில
கண்கள் வேண்டுமடி

ஆண் : எட்டு கண்கள்
இருந்தால் நான் நான்கு
திசைகள் அளப்பேன்
உன்னை எப்படியும்
கண்கள் காணுமடி

ஆண் : கை அடக்க நிலவே
கதிர் அழகே நீ எங்கே எங்கே
காற்றை அனுப்பி தேடினேன்

ஆண் : கண் இமைக்கும்
பொழுதில் நீ மறைந்தால்
என்ன ஆகும் என்று தூக்கத்தை
தூக்கில் ஏற்றினேன்

ஆண் : விண்ணில் எரியும்
கல்லோ அந்த விண்ணை
கடப்பதில்லை மண்ணில்
உலவும் நீயோ என்றும்
என்னை கடப்பதில்லை
உன்னை நான் அடைவது
சத்தியம்

குழு : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஓஹோ

ஆண் : ஜீ பூம்பா ஹே
ஹே ஜீ பூம்பா எந்தன்
தேவதையை நீ காட்டு

ஆண் : காட்டினால்
காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன்
பூ போட்டு

ஆண் : உன்னை நினைத்து
பெண்ணே உயிர் விட்டு
விட்டேனே காதலுக்கு
தான் என்னை விற்று
விட்டேனே

ஆண் : உன்னை அடைவேன்
என்றே எமன் விட்டு வைத்தானே
உன்னுயிரில் என்னை கட்டி
வைத்தானே

ஆண் : மழையில் நனைந்த
காகிதம் போல எனது தேகம்
ஆகிய போதும் உன்னை நான்
அடைவது சத்தியம்

குழு : ஓஹோ

குழு : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here