Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Jeevanae jeevanae
Engu ponaaiyo
Ketkudhae un kural
Neril vaaraiyo

Male : Kangalil un mugam
Enthan mun thondrudhe
Kaaladi thediyae
Paathaigal neeluthu
Naan oiynthidaamal thedi vandhu
Unnai cheruven…nnnn…

Male : Jeevanae jeevanae
Engu ponaaiyo
Ketkudhae un kural
Neril vaaraiyoo…oo…

Male : Deepam ena
Suzhalum vizhi chudaroli
Unai kaatrinilum
Anaiya vida maatten

Male : Uyirukkullae
Uyir kalandha uyir oliyae
Unai oru pozhudhum
Veliyil vida maaten

Male : Enakkul unnai thoonga veithu
Enadhu moochaal mooduven
Iravum pagalum vizhiththu irundhu
Unnai paarthae vaazhuven
Naan oiynthu oiynthu pogum podhum
Unnai theduven

Male : Jeevanae jeevanae
Engu ponaaiyo
Ketkudhae un kural
Neril vaaraiyo

Male : Karuvaraiyil
Urangum oru kuzhandhai ena
En idhaiyathilae
Unai chumandhu vaazhven

Male : Kadavul vandhu
Ethiril nindru kettaalum
Naan enai tharuven
Unnai thara maatten

Male : Kaalam nandrae endru aaga
Unnai kanden kanmani
Sogam indrae nindru poga
Vandhu serndhaai kanmani
Ithu kaadhal kaalam vaazhththum geetham
Engum ketkudhae…ae…

Male : Deviyae deviyae
Thendral thaalaatta
Sogamae theernthadhaal
Nenjil thaenoora

Male : Mayilgalin iruginaal
Un mugam varududhae
Kaadhalin amudhinai
Idhaiyaththaal paruguthae
Andha kaadhal devan aanai
Endru solvadhaaradi…eee…

Male : {Nanananana naaaanaaaaa
Naaana naa naa naa} (2)

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ

ஆண் : கண்களில் உன் முகம்
எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே
பாதைகள் நீளுது
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து
உன்னை சேருவேன்…

ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ..ஓ…

ஆண் : தீபம் என
சுழலும் விழி சுடரொளி
உனை காற்றினிலும்
அனைய விட மாட்டேன்

ஆண் : உயிருக்குள்ளே
உயிர் கலந்த உயிர் ஒளியே
உனை ஒரு பொழுதும்
வெளியில் விட மாட்டேன்

ஆண் : எனக்குள் உன்னை தூங்க வைத்து
எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னை பார்த்தே வாழ்வேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும்
உன்னை தேடுவேன்

ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ

ஆண் : கருவறையில்
உறங்கும் ஒரு குழந்தை என
என் இதயத்திலே
உனை சுமந்து வாழ்வேன்

ஆண் : கடவுள் வந்து
எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனை தருவேன்
உன்னை தர மாட்டேன்

ஆண் : காலம் நன்றே என்று ஆக
உன்னை கண்டேன் கண்மணி
சோகம் இன்றே நின்று போக
வந்து சேர்ந்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம்
எங்கும் கேட்குதே..ஏ…

ஆண் : தேவியே தேவியே
தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால்
நெஞ்சில் தேன் ஊற

ஆண் : மயில்களின் இறகினால்
உன் முகம் வருடுதே
காதலின் அமுதினை
இதயத்தால் பருகுதே
அந்த காதல் தேவன் ஆணை
என்று சொல்வதாரடி..இ….

ஆண் : {நானாநானா னா நானா
நானா னா னா னா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here