Singer : Vijay Jesudas

Music by : Iniyavan

Lyrics by : Vairamuthu

Male : Jenmam niraindhadhu sendravar vaazhga
Sindhai kalangida vandhavar vaazhga
Neeril midhandhidum kangalum kaaiga
Nimmadhi nimmadhi ivvidam soozhga

Male : Jananamum boomiyil pudhiyadhu illai
Maranathai pol oru pazhaiaydhum illai
Irandumillaavidil iyarkaiyum illai
Iyarkaiyin aanaithaaan gyaanathin ellai

Male : Paasam ulaviya kangalum engae?
Paainth thulaviya kaigalum engae?
Dhesam alaviya kaalgalum engae?
Thee undathendrathu saambalum ingae

Male : Kannil therindhadhu kaatrudan poga
Mannil pirandhadhu mannudal serga
Elumbhu sahdai konda uruvangal poga
Echangalaal andha innuyir vaazhga

Male : Pirappu illamalae naal ondru illai
Irappu illaamalum naalondru illai
Nesathinaal varum ninaivugal thollai
Marathiyai pol oru maamarundhillai

Male : Kadal thodum aarugal kalanguvathillai
Tharai thodum thaaraigal azhuvadhum illai
Nadhi mazhai pondrathae vidhiyendru kandum
Madhi konda maanudar mayanguvadhenna

Male : Maranathinaal sila kobangal theerum
Maranathinaal sila saabangal theerum
Vaedham sollaadhadhai maranangal koorum
Vidhai ondru veezhndhida chedivandhu serum

Male : Boomikku naan yaathirai vandhom
Yaathirai keetroli munn nithirai kondom
Nithirai povadhu niyadhi endraalum
Yaathirai enbadhu thodarkadhaiyaagum

Male : Thendralin poongaram thendidum podhum
Sooriya keetroli thondridum podhum
Mazhalaiyin thaen mozhi seviyurum podhum
Maandavar emmudan vaazhndhida koodum

Male : Maandavar swaasangal kaatrudan serga
Thooyavar kannoli sooriyin serga
Boothangal aindhilum pon udal serga
Ponavar punniyam emmudan serga
Ponavar punniyam emmudan serga

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இனியவன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன

ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here