Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Jeyichchuttae kannaa nee jeyichchuttae
Theranthutae kannai theranthuttae
Jeyichchuttae kannaa nee jeyichchuttae

Male : Unnidaththil thottaraththil vettri enakku
Kannaa naan yaar kittataa thoththaen
Saathaarana manushan kittayaa
Unnidaththil thottaraththil vettri enakku
Ennai theliya vaiththaai thannai
Puriya vaiththaai en nandri unakku

Male : Kannaa jeyichchuttadaa nee
Jeyichchuttae kannae nee jeyichchuttae

Male : Sooriyanai paarththu intha naai kulaiththathu
Un soodu pattu kedu kettu vaai adaiththathu
Aganthai pidiththa siru kuzhanthai pidiththa
Pidivaatham theernthathendru paaradaa
Unnai vendru nindravan yaaradaa…

Male : Kannaa un naadakaththil naanoru paaththiram
Unakku mun naan emmaaththiram

Male : Jeyichchuttae kannaa nee jeyichchuttae

Male : Ettadukku kattidaththil onbathu ottai
Idhil nalla raththam ulla mattum eththnai saettai
Kannaa sakthi irunthappa puthiyillai
Puthi irukkirappo sakthi illai

Male : Kondu vanthenna kondu selvathenna
Ondrumillayae mudivilae
Idhai unarntha pillai un madiyilae
Kannaa neethaandaa jeyichae

Male : Jeyichchuttae kannaa nee jeyichchuttae

Male : Aanavaththai vittozhiththaen odi varuga
Kannaa naanirukkum vasalai nee thedi varuga

Male : Thannaiyarinthavarkku thaanaagi nirpavane
Ennaiyarinthu kondaen mannanae
Enakkul geethai eduthuraiththa kannanae
Kanna…….kanna…….kanna…….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
தெறந்துட்டே கண்னை தெறந்துட்டே
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே….

ஆண் : உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
கண்ணா நான் யார் கிட்டடா தோத்தேன்
சாதாரண மனுஷன் கிட்டயா….
உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
என்னை தெளிய வைத்தாய் தன்னை
புரிய வைத்தாய் என் நன்றி உனக்கு

ஆண் : கண்ணா ஜெயிச்சுட்டடா நீ
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே

ஆண் : சூரியனைப் பார்த்து இந்த நாய் குலைத்தது
உன் சூடு பட்டு கேடு கெட்டு வாய் அடைத்தது
அகந்தை பிடித்த சிறு குழந்தை பிடித்த
பிடிவாதம் தீர்ந்ததென்று பாரடா
உன்னை வென்று நின்றவன் யாரடா….

ஆண் : கண்ணா உன் நாடகத்தில் நானொரு பாத்திரம்
உனக்கு முன் நான் எம்மாத்திரம்

ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே

ஆண் : எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை
இதில் நல்ல ரத்தம் உள்ள மட்டும் எத்தனை சேட்டை
கண்ணா சக்தி இருந்தப்ப புத்தியில்லை
புத்தி இருக்கிறப்போ சக்தி இல்லை

ஆண் : கொண்டு வந்தென்ன கொண்டு செல்வதென்ன
ஒன்றுமில்லையே முடிவிலே
இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே
கண்ணா நீதான்டா ஜெயிச்சே……

ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே

ஆண் : ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக
கண்ணா நானொரு பைத்தியக்காரன்
நீ வேறு நான் வேறுன்னு நெனச்சப்ப நீ வந்தே
நீ என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறப்போ எப்படி வருவே

ஆண் : ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக

ஆண் : தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே
என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே
எனக்குள் கீதை எடுத்துரைத்த கண்ணனே
கண்ணா………..கண்ணா………..கண்ணா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here