Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Jinjillaaraa konja vaa vaa
Oonjal aadum ullaasa theraa
Ilamai sendraal adhu inimai undaavathedhu
Kaalam ponaanathu kanivaai kondaaduthu

Female : Jinjillaaraa konja vaa vaa
Oonjal aadum ullaasa theraa

Female : Neeril nindra pothum theeyil thullum thegam
Mogam thaagam sera thodaamal paarththu
Paarijaatham pookka paavai maeni verkka
Paarvai ambu paaya sugam alli saerththu

Female : Muththaadum neram
Thththai meedhu thaththai ondru thaththi chella
Thottaalae pothum
Nenjodu meththai ittu viththai solla

Female : Mullai sirippaal kollai adippaen
Pon maeni theyum pothu sorkkamthaan

Female : Jinjillaaraa konja vaa vaa
Oonjal aadum ullaasa theraa
Ilamai sendraal adhu inimai undaavathedhu
Kaalam ponaanathu kanivaai kondaaduthu

Female : Haei jinjillaaraa konja vaa vaa
Oonjal aadum ullaasa theraa

Female : Kadhal pesum killai kaaman thotta mullai
Kaala kaalam thorum kaiyodu kooda
Aadai moodum palaa aasai thaen palaavaa
Aadum vennilaavaa nenjodu nenjodu aada

Female : Kann moodum velai
Chittu maeni kattupaadu vittu poga
Kalloorum cholai
Ulloora inbam thottu thullo paaya

Female : Mullai sirippaal kollai adippaen
Pon maeni theyum pothu sorkkamthaan

Female : Jinjillaaraa konja vaa vaa
Oonjal aadum ullaasa theraa
Ilamai sendraal adhu inimai undaavathedhu
Kaalam ponaanathu kanivaai kondaaduthu

Female : Haei jinjillaaraa konja vaa vaa
Oonjal aadum ullaasa theraa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா
ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா
இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது
காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது….

பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா
ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா

பெண் : நீரில் நின்ற போதும் தீயில் துள்ளும் தேகம்
மோகம் தாகம் சேர தொடாமல் பார்த்து
பாரிஜாதம் பூக்க பாவை மேனி வேர்க்க
பார்வை அம்பு பாய சுகம் அள்ளிச் சேர்த்து

பெண் : முத்தாடும் நேரம்
தத்தை மீது தத்தை ஒன்று தத்திச் செல்ல
தொட்டாலே போதும்
நெஞ்சோடு மெத்தை இட்டு வித்தை சொல்ல

பெண் : முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன்
பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான்…..

பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா
ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா
இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது
காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது…

பெண் : ஹேய் ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா
ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா

பெண் : காதல் பேசும் கிள்ளை காமன் தோட்ட முல்லை
கால காலம் தோறும் கையோடு கூட
ஆடை மூடும் பலா ஆசைத் தேன் பலாவா
ஆடும் வெண்ணிலாவா நெஞ்சோடு ஆட

பெண் : கண் மூடும் வேளை
சிட்டு மேனி கட்டுப்பாடு விட்டுப் போக
கள்ளூறும் சோலை
உள்ளூர இன்பம் தொட்டு துள்ளிப் பாய

பெண் : முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன்
பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான்

பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா
ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா
இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது
காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது…

பெண் : ஹேய் ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா
ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here