Singers : S. C. Krishnan, L. R. Anjali and Manorama
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Kaadu kandaa veragu vetrathu
Chorus : Aamaa aamaa
Female : Adhai kattu kattaa velaikku vikkirathu
Chorus : Aamaa aamaa
Female : Kaadu kandaa veragu vetrathu
Chorus : Aamaa aamaa
Female : Adhai kattu kattaa velaikku vikkirathu
Chorus : Aamaa aamaa
Female : Naanga thalaiyil vaikkirathu
Nallaa thalukki vikkirathu
Yaarum pudikka vanthaa veragumillae
Puliyai kandaa uyirumilla
Female : Anthiraththil pozhappu nikkirathu
Antha aandavanthaan thunaikku nikkirathu
Chorus : Anthiraththil pozhappu nikkirathu
Antha aandavanthaan thunaikku nikkirathu
Male : Inaththil mudhalaali
Panaththil peruththa enthan
Vanaththil pugunthu kondu maraththai vetta vantha
Aattu kuttikalaa neenga maattikittikalaa
Yaei imbuttu kuttikalaa neega ambuttukitteengalaa
Imbuttu kuttikalaa neega ambuttukitteengalaa
Female : Sooranai vettiya
Subbramaniya saamiyae neeyum vaa vaa
Appan soolaayithamum velaayithamum
Sumanthu kondae vaavaa
Chorus : Sooranai vettiya
Subbramaniya saamiyae neeyum vaa vaa
Appan soolaayithamum velaayithamum
Sumanthu kondae vaavaa
Female : Aarumugaththu saami velaayuthaththai kaami
Yaeru mayil yaeri aiyaa inthapakkam vaa nee
Chorus : Yaeru mayil yaeri aiyaa inthapakkam vaa nee
Female : Paadupadum yaezhai nilaiyae
Paakkavae sakikaliyae….aa…aa…aa…aa…
Paadupadum yaezhai nilaiyae
Paakkavae sakikaliyae….
Female : Paainthu kolla vanthaen
Ingae paayattum antha puliyae
Paainthu kolla vanthaen
Ingae paayattum antha puliyae
Female : Yaezhaikku thunai naan
Ini yaegapogam sellathini
Yaezhaikku thunai naan
Ini yaegapogam sellathini
Kalam maari pogum yeazhai
Vaazhvu maaripogum ini….
Female : Padupadum yaezhai nilaiyae
Paakkavey sakikkalaiyae
Female : Aadhikkam seiyyum puliyae
Unakku aanavam enna
Aagattum podaa veliyae
Aadhikkam seiyyum puliyae
Unakku aanavam enna
Aagattum podaa veliyae
Male : Naan povathumillai
Yaezhaikku vaazhvedharkku naam vaazhnthidum
Intha kaadellaam sonthamenakku
Female : Enna sonna
Male : Yaezhaikku vaazhvedharkku naam vaazhnthidum
Intha kaadellaam sonthamenakku
Female : Velai edupaen
Male : Paainthu kadippaen
Female : Vaalai murippaen
Male : Vayiththai kizhippaen
Female : Velai edupaen
Male : Paainthu kadippaen
Female : Vaalai murippaen
Male : Vayiththai kizhippaen
Female : Ooradi potean paaradaa
Naan velai eduththaa uyirudan selvaan yaaradaa
Ooradi potean paaradaa
Naan velai eduththaa uyirudan selvaan yaaradaa
Sangaranai therntheduthaa sangadamillae
Dharmalinga thaathaa melae nampikkai illae…..
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், மனோரமா
மற்றும் எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : காடு கண்டா வெறகு வெட்றது
குழு : ஆமா…..ஆமா…
பெண் : அதைக் கட்டுக் கட்டா வெலைக்கு விக்கிறது
குழு : ஆமா…..ஆமா…
பெண் : காடு கண்டா வெறகு வெட்றது
குழு : ஆமா…..ஆமா…
பெண் : அதைக் கட்டுக் கட்டா வெலைக்கு விக்கிறது
குழு : ஆமா…..ஆமா…
பெண் : நாங்க தலையில் வைக்கிறது
நல்லா தளுக்கி விக்கிறது
யாரும் புடிக்க வந்தா வெறகுமில்லே
புலியைக் கண்டா உயிருமில்லே
பெண் : அந்திரத்தில் பொழப்பு நிக்கிறது
அந்த ஆண்டவன்தான் துணைக்கு நிக்கிறது
குழு : அந்திரத்தில் பொழப்பு நிக்கிறது
அந்த ஆண்டவன்தான் துணைக்கு நிக்கிறது
ஆண் : இனத்தில் முதலாளி
பணத்தில் பெருத்த எந்தன்
வனத்தில் புகுந்து கொண்டு மரத்தை வெட்ட வந்த
ஆட்டுக் குட்டிகளா நீங்க மாட்டிக் கிட்டிகளா
ஏய் இம்புட்டு குட்டிகளா நீங்க அம்புட்டு கிட்டீங்களா
இம்புட்டு குட்டிகளா நீங்க அம்புட்டு கிட்டீங்களா
பெண் : சூரனை வெட்டிய
சுப்பிரமணிய சாமியே நீயும் வா…….வா…….
அப்பன் சூலாயுதமும் வேலாயுதமும்
சுமந்துகொண்டே வாவா
குழு : சூரனை வெட்டிய
சுப்பிரமணிய சாமியே நீயும் வா…….வா…….
அப்பன் சூலாயுதமும் வேலாயுதமும்
சுமந்துகொண்டே வாவா
பெண் : ஆறுமுகத்து சாமி….வேலாயுதத்தைக் காமி
ஏறு மயில் ஏறி ஐயா இந்தப்பக்கம் வா நீ
குழு : ஏறு மயில் ஏறி ஐயா இந்தப்பக்கம் வா நீ
பெண் : பாடுபடும் ஏழை நிலையே
பாக்கவே சகிக்கலையே…ஆஆஆஆ…
பாடுபடும் ஏழை நிலையே
பாக்கவே சகிக்கலையே..
பெண் : பாய்ந்து கொல்ல வந்தேன்
இங்கே பாயட்டும் அந்த புலியே
பாய்ந்து கொல்ல வந்தேன்
இங்கே பாயட்டும் அந்த புலியே
பெண் : ஏழைக்குத் துணை நான்
இனி ஏகபோகம் செல்லாதினி
ஏழைக்குத் துணை நான்
இனி ஏகபோகம் செல்லாதினி
காலம் மாறி போகும் ஏழை
வாழ்வு மாறிப்போகும் இனி….
பெண் : பாடுபடும் ஏழை நிலையே
பாக்கவே சகிக்கலையே…
பெண் : ஆதிக்கம் செய்யும் புலியே
உனக்கு ஆணவம் என்ன
ஆகட்டும் போடா வெளியே
ஆதிக்கம் செய்யும் புலியே
உனக்கு ஆணவம் என்ன
ஆகட்டும் போடா வெளியே
ஆண் : நான் போவதுமில்லை
ஏழைக்கு வாழ்வெதற்கு நாம் வாழ்ந்திடும்
இந்தக் காடெல்லாம் சொந்தமெனக்கு
பெண் : என்ன சொன்ன
ஆண் : ஏழைக்கு வாழ்வெதற்கு நாம் வாழ்ந்திடும்
இந்தக் காடெல்லாம் சொந்தமெனக்கு
பெண் : வேலை எடுப்பேன்
ஆண் : பாய்ந்து கடிப்பேன்
பெண் : வாலை முறிப்பேன்
ஆண் : வயித்தைக் கிழிப்பேன்
பெண் : வேலை எடுப்பேன்
ஆண் : பாய்ந்து கடிப்பேன்
பெண் : வாலை முறிப்பேன்
ஆண் : வயித்தைக் கிழிப்பேன்
பெண் : ஓரடி போட்டேன் பாரடா
நான் வேலை எடுத்தா உயிருடன் செல்வான் யாரடா……..
ஓரடி போட்டேன் பாரடா
நான் வேலை எடுத்தா உயிருடன் செல்வான் யாரடா……..
சங்கரனைத் தேர்ந்தெடுத்தா சங்கடமில்லே
தர்மலிங்கத் தாத்தா மேலே நம்பிக்கை இல்லே…