Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Bharathwaj

Male : Kaadu thiranthu kidakindrathu
Kaatru malargalai pudaikindrathu
Kangal thiranthae kidakindrathu
Kaadhal uyirgalai udaikindrathu
Adadaa….nenjil varum kaadhal vali
Poovil oru sooravaliyo oh …oohhoo

Female : Nenjai vittu vantha vaarthai ondru
Thondaikkul soozhkondatho
Male : Unnai vittu udal meelavillai
En kaalgal ver kondatho
Female : Bhoomikku vantha pani thuli naan
Sooriyanae ennai kudithu vidu
Male : Yugam yugamaai naan erinthu vitten
Pani thuliyae ennai anaithu vidu

Male : Uravae…uyirae…. unarvaeee…
Nenjil varum kaadhal vali
Poovil oru sooravaliyo..oohhoo..

Female : La la la lalalala..La la la lalalala…
Ooooooooo……

Male : Sitrinbathin chinna vaasal vazhi
Perinbam naam adaivom
Female : Kaal thadangal atra bhoomiyilae
Kaatraga naam nuzhaivom
Male : Chithirai maadhathai naan nanaithu
Female : Kodaiyil unakkoru kulir koduppen
Margazhi maadhathai naan erithu
Munpani kaalathil anal koduppen

Male : Adiyae… sagiyae… sugiyaeeee…
Nenjil varum kaadhal vali
Poovil oru sooraavaliyo…ooohh.hoo…

Female : Kaadu thiranthu kidakindrathu
Kaatru malargalai pudaikindrathu
Kangal thiranthae kidakindrathu
Kaadhal uyirgalai udaikindrathu

Male : Adadaa….nenjil varum kaadhal vali
Poovil oru sooravaliyo oh …ooh..hoohoo..

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் வரும் காதல்
வலி பூவில் ஒரு சூறாவளியோ
ஓ ஓஹோ

பெண் : நெஞ்சை விட்டு
வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூழ்
கொண்டதோ
ஆண் : உன்னை விட்டு
உடல் மீளவில்லை என்
கால்கள் வேர் கொண்டதோ
பெண் : பூமிக்கு வந்த பனி
துளி நான் சூரியனே என்னை
குடித்துவிடு
ஆண் : யுகம் யுகமாய்
நான் எரிந்து விட்டேன்
பனி துளியே என்னை
அணைத்து விடு

ஆண் : உறவே உயிரே
உணர்வே நெஞ்சில் வரும்
காதல் வலி பூவில் ஒரு
சூறாவளியோ ஓஹோ

பெண் : …………………….

ஆண் : சிற்றின்பத்தின்
சின்ன வாசல் வழி
பேரின்பம் நாம்
அடைவோம்
பெண் : கால் தடங்கள்
அற்ற பூமியிலே காற்றாக
நாம் நுழைவோம்
ஆண் : சித்திரை மாதத்தை
நான் நனைத்து
பெண் : கோடையில் உனக்கொரு
குளிர் கொடுப்பேன் மார்கழி
மாதத்தை நான் எரித்து முன்பனி
காலத்தில் அனல் கொடுப்பேன்

ஆண் : அடியே சகியே
சுகியே நெஞ்சில் வரும்
காதல் வலி பூவில் ஒரு
சூறாவளியோ ஓஹோ

பெண் : காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது

ஆண் : அடடா நெஞ்சில்
வரும் காதல் வலி பூவில்
ஒரு சூறாவளியோ ஓ ஓ
ஹோ ஹோ

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here