Singer : Harini

Music by : Deva

Female : Kaalamellaam adi kaalamellaam
Ivan unnodu unnodu unnodu
Kanmaniyae yen sogangal
Un kannodu kannodu kannodu

Female : Aanavam pol oru sumaiyillai
Anbinai poloru azhagillai
Paasamum nesamum ariyaamal
Vaazhvadhil thuliyum sugamillai

Female : Kannil konjam anbai veithaal
Sutri sutri poonjolai
Anbu kaigal thottu paarthaal
Paalai kooda neeroodai

Female : Kaalamellaam adi kaalamellaam
Ivan unnodu unnodu unnodu

Female : Pookalin azhagu oru dhinamae
Poovaiyin azhagu sila dhinamae
Azhiyaadha azhagu anbinilae

Female : Koondhalin azhagu udhirum varai
Gopura azhagu idiyum varai
Anbukku azhagu irudhi varai
Un manam unnaiyae dhooramaai veithathae
Adhu unakkindru uravaanadhaa

Female : Sangeethamum sandhosamum
Anbu konda vaazhvil undu
Kandupudi pon maanae
Anbu konda nenjam podhum
Ezhai kooda seemaanae

Female : Kaalamellaam adi kaalamellaam
Ivan unnodu unnodu unnodu

Female : Veiyil varum munnae kudai pidithaan
Verthidum munnae visiri vittaan
Urangaamal kannum sivandhu vittaan

Female : Unakkena thannai koduthu vittaan
Sudu mozhi sonnaai poruthu vittaan
Thaaiyaagi unnai jeyithu vittaan

Female : Paaradi paingili kaadhalan sannidhi
Adhil oru deivam ivan allava
Unakkagavae ivan vaazhgiraan
Edharkaaga undhan vaazhkai nee solladi
Thani thani vaazhvin artham kedaiyadhadi

Female : Kaalamellaam adi kaalamellaam
Ivan unnodu unnodu unnodu
Kanmaniyae yen sogangal
Un kannodu kannodu kannodu

Female : Aanavam pol oru sumaiyillai
Anbinai poloru azhagillai
Paasamum nesamum ariyaamal
Vaazhvadhil thuliyum sugamillai

Female : Kannil konjam anbai veithaal
Sutri sutri poonjolai
Anbu kaigal thottu paarthaal
Paalai kooda neeroodai

Female : Kaalamellaam adi kaalamellaam
Ivan unnodu unnodu unnodu

பாடகி : ஹரிணி

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு
கண்மணியே ஏன் சோகங்கள்
உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு

பெண் : ஆணவம் போலொரு சுமையில்லை
அன்பினை போலொரு அழகில்லை
பாசமும் நேசமும் அறியாமல்
வாழ்வதில் துளியும் சுகமில்லை

பெண் : கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால்
சுற்றி சுற்றி பூஞ்சோலை
அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால்
பாலை கூட நீரோடை

பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு

பெண் : பூக்களின் அழகு ஒரு தினமே
பூவையின் அழகு சில தினமே
அழியாத அழகு அன்பினிலே

பெண் : கூந்தலின் அழகு உதிரும் வரை
கோபுர அழகு இடியும் வரை
அன்புக்கு அழகு இறுதி வரை
உன் மனம் உன்னையே தூரமாய் வைத்ததே
அது உனக்கின்று உறவானதா

பெண் : சங்கீதமும் சந்தோஷமும்
அன்புக் கொண்ட வாழ்வில் உண்டு
கண்டுபிடி பொன் மானே
அன்புக் கொண்ட நெஞ்சம் போதும்
ஏழை கூட சீமானே

பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு…

பெண் : வெய்யில் வரும் முன்னே குடைப் பிடித்தான்
வேர்த்திடும் முன்னே விசிறி விட்டான்
உறங்காமல் கண்ணும் சிவந்து விட்டான்

பெண் : உனக்கென தன்னை கொடுத்து விட்டான்
சுடு மொழி சொன்னாய் பொறுத்து விட்டான்
தாயாகி உன்னை ஜெயித்து விட்டான்

பெண் : பாரடி பைங்கிளி காதலின் சந்நிதி
அதில் ஒரு தெய்வம் இவனல்லவா
உனக்காகவே இவன் வாழ்கிறான்
எதற்காக உந்தன் வாழ்க்கை நீ சொல்லடி
தனித்தனி வாழ்வின் அர்த்தம் கிடையாதடி

பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு
கண்மணியே ஏன் சோகங்கள்
உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு

பெண் : ஆணவம் போலொரு சுமையில்லை
அன்பினை போலொரு அழகில்லை
பாசமும் நேசமும் அறியாமல்
வாழ்வதில் துளியும் சுகமில்லை

பெண் : கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால்
சுற்றி சுற்றி பூஞ்சோலை
அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால்
பாலை கூட நீரோடை

பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here