Singer : T. M. Soundararajan

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Male : Kaalangalae kann paarungal
Kavalai kanneer oru puram
Kadhal sugangal maru puram
Veliyittu nirppathenna kaalangalae

Male : Idhu aayiram malargalin thottam
Idhil aasaiyil aadidum kottam
Idhu aayiram malargalin thottam
Idhil aasaiyil aadidum kottam
Ingu naalukku naal oru aattam
Idhu nadakkum varai mana vaattam

Male : Kaalangalae kann paarungal

Male : Aadaatha thogai isai paadatha kuyil
Poovaatha pushpam mazhai pozhiyaatha megam
Veenaiyundu thanthiyillai
Koyilundu vaasalillai
Yaaritta saabam yaarukku laabam

Male : Tamarai poovil vandaadum kolam
Malarnthathaanal vantha kadhal
Maathargal vaazhkkai malaruvathendraal
Kaalaththil thirakkanum vaasal

Male : Thaedi kuriththu oru paruvam varuvatharkku
Iraivan arul vendum
Thalaivan thunai vendum
Thennangkeettril oru thendral thazhuvi vara
Kaalam vara vendum
Karunai thara vendum….

Male : Kaalangalae kann paarungal

Male : Ilamai enbathu oru thanaiyaatha veri
Adhu arivin kaaichal
Ananthathin marana padukkai

Male : Ilamaiyilae oru sanniyaasi kolam varuvathu
Iraivanin leelai
Ezhilmigu penmai malaraathirunthaal
Eppadi varum manamaalai

Male : Thaayin manathil oru sanjalam vanthathu
Aaruthal adaiyaathu anantham kidaiyaathu
Magalin vaazhvil oru mangalam illai
Thaaimai adaiyaathu thanimai tholaiyaathu

Male : Kaalangalae kann paarungal

Male : Idhu aayiram malargalin thottam
Idhil aasaiyil aadidum kottam
Ingu naalukku naal oru aattam
Idhu nadakkum varai mana vaattam

Male : Kaalangalae…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காலங்களே கண் பாருங்கள்
கவலை கண்ணீர் ஒரு புறம்
காதல் சுகங்கள் மறு புறம்
வேலியிட்டு நிற்பதென்ன காலங்களே……

ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம்
இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம்
இது ஆயிரம் மலர்களின் தோட்டம்
இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம்
இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம்
இது நடக்கும் வரை மன வாட்டம் ….

ஆண் : காலங்களே கண் பாருங்கள்

ஆண் : ஆடாத தோகை இசை பாடாத குயில்
பூவாத புஷ்பம் மழை பொழியாத மேகம்
வீணையுண்டு தந்தியில்லை
கோயிலுண்டு வாசலில்லை
யாரிட்ட சாபம் யாருக்கு லாபம்…..

ஆண் : தாமரைப் பூவில் வண்டாடும் கோலம்
மலர்ந்ததனால் வந்த காதல்
மாதர்கள் வாழ்க்கை மலருவதென்றால்
காலத்தில் திறக்கணும் வாசல்

ஆண் : தேதி குறித்து ஒரு பருவம் வருவதற்கு
இறைவன் அருள் வேண்டும்
தலைவன் துணை வேண்டும்
தென்னங்கீற்றில் ஒரு தென்றல் தழுவி வர
காலம் வர வேண்டும்
கருணை தர வேண்டும்…

ஆண் : காலங்களே கண் பாருங்கள்

ஆண் : இளமை என்பது ஒரு தணியாத வெறி
அது அறிவின் காய்ச்சல்
ஆனந்தத்தின் மரணப் படுக்கை

ஆண் : இளமையிலே ஒரு சந்நியாசி கோலம் வருவது
இறைவனின் லீலை
எழில்மிகு பெண்மை மலராதிருந்தால்
எப்படி வரும் மணமாலை

ஆண் : தாயின் மனதில் ஒரு சஞ்சலம் வந்தது
ஆறுதல் அடையாது ஆனந்தம் கிடையாது
மகளின் வாழ்வில் ஒரு மங்கலம் இல்லை
தாய்மை அடையாது தனிமை தொலையாது

ஆண் : காலங்களே கண் பாருங்கள்

ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம்
இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம்
இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம்
இது நடக்கும் வரை மன வாட்டம்……

ஆண் : காலங்களே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here