Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Kaalgalae nillungal
Kangalae sollungal
Kaalgalae nillungal
Kangalae sollungal
Kaadhal enbadhu nadagama
Adhil kanneer enbadhu kaaviyama
Kaalgalae nillungal
Kangalae sollungal

Female : Saalaiyilae vidhi vazhiyae
Sandhithaal oru vazhiyae
Saalaiyilae vidhi vazhiyae
Sandhithaal oru vazhiyae
Thani vazhiyae avanai vittu
Than vazhiyae pogathae
Kaalgalae nillungal
Kangalae sollungal

Female : Engae nee ponaalum
Avan mugamae thondratho
Engae nee ponaalum
Avan mugamae thondratho
Evvidam nee sendraalum
Avan kuralae kaeladho
Kaalgalae nillungal
Kangalae sollungal

Female : Ivan manaivi ivalenavae
Eluthivittaan iraivanadi
Ivan manaivi ivalenavae
Eluthivittaan iraivanadi
Avan eluthum oviyathai
Azhithavargal illaiyadi
Kaalgalae nillungal
Kangalae sollungal
Kaadhal enbadhu nadagama
Adhil kanneer enbadhu kaaviyama
Kaalgalae nillungal
Kangalae sollungal

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
காதல் என்பது நாடகமா அதில்
கண்ணீர் என்பது காவியமா
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்

பெண் : சாலையிலே விதி வழியே
சந்தித்தாள் ஒரு வழியே
சாலையிலே விதி வழியே
சந்தித்தாள் ஒரு வழியே
தனிவழியே அவனை விட்டு
தன் வழியே போகாதே
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்

பெண் : எங்கே நீ போனாலும்
அவன் முகமே தோன்றாதோ
எங்கே நீ போனாலும்
அவன் முகமே தோன்றாதோ
எவ்விடம் நீ சென்றாலும்
அவன் குரலே கேளாதோ
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்

பெண் : இவன் மனைவி இவளெனவே
எழுதிவிட்டான் இறைவனடி
இவன் மனைவி இவளெனவே
எழுதிவிட்டான் இறைவனடி
அவன் எழுதும் ஒவியத்தை
அழித்தவர்கள் இல்லையடி
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்
காதல் என்பது நாடகமா அதில்
கண்ணீர் என்பது காவியமா
கால்களே நில்லுங்கள்
கண்களே சொல்லுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here