Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kaanalilae meen vettai
Kaatrinilae maaligaigal
Vaanagaththu veedhiyilae
Valam poguum karpanaigal

Male : Maanidarin vaazhkkaiyilae
Mayakka migum sonthangal
Aanavarai paarththu vittaen
Aththanaiyum kanavugalae

Male : Antharanga neer kulaththae
Pooththezhuntha thamaraigal
Santhiyilae malaraagi
Anthiyilae mottaagi

Male : Sinthaiyilae kolamittu
Thirumpaamal poyinavo
Vinthaiyaai kalanthu vitta
Vilaiyaattu bommaigalae

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கானலிலே மீன் வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியிலே
வலம் போகும் கற்பனைகள்

ஆண் : மானிடரின் வாழ்க்கையிலே
மயக்க மிகும் சொந்தங்கள்
ஆனவரை பார்த்து விட்டேன்
அத்தனையும் கனவுகளே

ஆண் : அந்தரங்க நீர் குளத்தே
பூத்தெழுந்த தாமரைகள்
சந்தியிலே மலராகி
அந்தியிலே மொட்டாகி

ஆண் : சிந்தையிலே கோலமிட்டுத்
திரும்பாமல் போயினவோ
விந்தையாய்க் கலந்து விட்ட
விளையாட்டு பொம்மைகளே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here