Singers : C. S. Jayaraman and M. L. Vasanthakumari

Music by : G. Govindarajulu Naidu

Male : Kaani nilam vendum…mm mm mm mm
Kaani nilam vendum paraasakthi
Kaani nilam vendum

Both : Kaani nilam vendum paraasakthi
Kaani nilam vendum

Male : Thoonil azhgiyadhaai…
Aa…aaa…aa….aa…aa…aaa….aaa….aaa…aaa…
Thoonil azhagiyadhaai nan maadangal
Thooya nirathinadhaai angu
Thoonil azhagiyadhaai nan maadangal
Thooya nirathinadhaai andha
Kaani nilathidaiyae or maaligai
Katti thara vendum andha
Kaani nilathidaiyae or maaligai
Katti thara vendum

Female : Angu kaeni aruginilae…
Ae…ae….ae…ae…a.e…ae…
Kaeni aruginilae…
Thennai mara keetrum ilaneerum
Kaeni aruginilae
Thennai mara keetrum ilaneerum…

Both : Kaani nilam vendum

Male : Pathu pannirendu thennai maram
Andha pakkatthilae venum
Pathu pannirendu thennai maram
Andha pakkatthilae venum
Nalla muthuchudar polae nilaa oli
Munbu varavenum
Nalla muthuchudar polae nilaa oli
Munbu varavenum

Female : Kathum kuyilosai sattrae vandhu
Kaadhil pada venum
Kathum kuyilosai sattrae vandhu
Kaadhil pada venum
Endhan sitham maginzhndhidavae
Nandraayilam thendral varavenum
Endhan sitham maginzhndhidavae
Nandraayilam thendral varavenum

Both : Kaani nilam vendum paraasakthi

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

ஆண் : காணி நிலம் வேண்டும்…ம்…ம்…ம்…ம்…
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்

இருவர் : காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்

ஆண் : தூணில் அழகியதாய்…
ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…ஆ…அ அ ஆ
தூணில் அழகியதாய் நன் மாடங்கள்
தூய நிறத்தினதாய் அங்கு
தூணில் அழகியதாய் நன் மாடங்கள்
தூய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஒர் மாளிகை
கட்டித் தர வேண்டும் அந்தக்
காணி நிலத்திடையே ஒர் மாளிகை
கட்டித்தர வேண்டும்

பெண் : அங்கு கேணி அருகினிலே…
ஏ……ஏ……ஏ…….ஏ……ஏ…..
கேணி அருகினிலே…
தென்னைமர கீற்றும் இளநீரும்
கேணி அருகினிலே
தென்னைமர கீற்றும் இளநீரும்…

இருவர் : காணி நிலம் வேண்டும்

ஆண் : பத்துப் பன்னிரண்டு தென்னை மரம்
அந்தப் பக்கத்திலே வேணும்
பத்துப் பன்னிரண்டு தென்னை மரம்
அந்தப் பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச்சுடர் போலே நிலா ஒளி
முன்பு வரவேணும்
நல்ல முத்துச்சுடர் போலே நிலா ஒளி
முன்பு வரவேணும்……

பெண் : கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதில் பட வேணும்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதில் பட வேணும்
எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாயிளம் தென்றல் வரவேணும்
எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாயிளம் தென்றல் வரவேணும்

இருவர் : காணி நிலம் வேண்டும் பராசக்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here