Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Mu. Metha

Male : Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna en aasai nenjae

Male : Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna

Male : Thaagangal ingae megangal angae
Yaen peithatho kann mazhai intha neram

Male : Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna

Male : Maaraatha sontham kalyaana pantham
Un vaazhvilae poonguyil koovum neram
Kaalangal maarum kaayangal aarum
Naam paadakaam vaazhvilae anbin raagam

Male : Ennaththil ennam inaikindra naatgal
Kannaththil enna kanneerin pookkal
Naan un thunai allavo en aasai nenjae

Male : Kaarkaala megam un kangal meedhu
Oorkolam povathenna

Male : Orr vaasal moodum orr vaasal naadum
Mul meedhilum poong kodi paadi aadum
Netrenndru ondru indrillai endru
Orr paadamae koorume kaalai vaanam

Male : Poomaalaiyaaga naan maara vendum
Pooppola naalum nee vaazha vedum
Neeraaduvaai thendralae en aasai nenjae

Male : Kaarkaala megam un kangal endrum
Kaanathu en kanmani kaalangal thorum
Kaarkaala megam un kangal meedhu
Kaanathu en kanmani

Male : Sogangal ingae neeraavi aagum
Sonthangalae vaazhmae entha naalum

Male : Kaarkaala megam un kangal endrum
Kaanathu en kanmani ….

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : மு. மேத்தா

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன

ஆண் : தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே
ஏன் பெய்ததோ கண் மழை இந்த நேரம்

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன

ஆண் : மாறாத சொந்தம் கல்யாண பந்தம்
உன் வாழ்விலே பூங்குயில் கூவும் நேரம்
காலங்கள் மாறும் காயங்கள் ஆறும்
நாம் பாடலாம் வாழ்விலே அன்பின் ராகம்

ஆண் : எண்ணத்தில் எண்ணம் இணைகின்ற நாட்கள்
கன்னத்தில் என்ன கண்ணீரின் பூக்கள்
நான் உன் துணை அல்லவோ என் ஆசை நெஞ்சே

ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன

ஆண் : ஓர் வாசல் மூடும் ஓர் வாசல் நாடும்
முள் மீதிலும் பூங்கொடி பாடி ஆடும்
நேற்றென்று ஒன்று இன்றில்லை என்று
ஓர் பாடமே கூறுமே காலை வானம்

ஆண் : பூமாலையாக நான் மாற வேண்டும்
பூப்போல நாளும் நீ வாழ வேண்டும்
நீராடுவாய் தென்றலே என் ஆசை நெஞ்சே

ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி காலங்கள் தோறும்
கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி

ஆண் : சோகங்கள் இங்கே நீராவி ஆகும்
சொந்தங்களே வாழுமே எந்த நாளும்

ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here