Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Male : Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai
Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai

Male : Kadhal kiliyae nee yaen pesa maranthaai

Male : Kangalil naan itta mai karaiya
Kanneer vidalaamo….aa….aa….aa….
Kaigalil naan itta valai kazhala unnai
Sogam thodalaamo

Male : Niththamum thamarai padhangalai
Intha nenjam sumanthathadi
Niththamum thamarai padhangalai
Intha nenjam sumanthathadi
Nenjinil vaazhnthidum oviyamaai
Unnai kangal varainthathadi

Male : Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai

Male : Atchaya paaththiram naai thottathaal
Adhai yaarum veruppathundo
Anthiyil chandhiran karaipattathaal
Adhai vaanam marupathundo

Male : Chiththirai maathaththi muzhu nilavaai
Intha thegam kidakkuthadi
Chiththirai maathaththi muzhu nilavaai
Intha thegam kidakkuthadi
Eththanai jenmangal maaridinum
Namm kadhal nilaikkumadi….

Male : Kadhal kiliyae nee yaen pesa maranthaai
Nadhaswaramae nee yaen paada maranthaai
Kadhal kiliyae nee yaen pesa maranthaai

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்
காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்

ஆண் : கண்களில் நான் இட்ட மை கரைய
கண்ணீர் விடலாமோ……ஆ…….ஆ……ஆ….
கைகளில் நான் இட்ட வளைக் கழல உன்னை
சோகம் தொடலாமோ

ஆண் : நித்தமும் தாமரை பாதங்களை
இந்த நெஞ்சம் சுமந்ததடி
நித்தமும் தாமரை பாதங்களை
இந்த நெஞ்சம் சுமந்ததடி
நெஞ்சினில் வாழ்ந்திடும் ஓவியமாய்
உன்னை கண்கள் வரைந்ததடி…….

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்

ஆண் : அட்சயப் பாத்திரம் நாய் தொட்டதால்
அதை யாரும் வெறுப்பதுண்டோ
அந்தியில் சந்திரன் கறைப்பட்டதால்
அதை வானம் மறுப்பதுண்டோ

ஆண் : சித்திரை மாதத்து முழு நிலவாய்
இந்த தேகம் கிடக்குதடி
சித்திரை மாதத்து முழு நிலவாய்
இந்த தேகம் கிடக்குதடி
எத்தனை ஜென்மங்கள் மாறிடினும் நம்
காதல் நிலைக்குமடி…….

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்
நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்
காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here