Singer : Ravi G

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Yugabharathi

Male : Kaatril aadum deepam pola
Kannil thondrum uravae
Neelam pootha vaanam pola
Nenjl neendhum ninaivae

Male : Ezhai veedu ena arindhum
Kolam podum nilavoliyae
Mullil thookki eriyaiyilum
Poovaai aagum oru vidhaiyae

Male : Vettaveli paadhaiyilae
Varum un ninaivu modhidudhae
Kothugira pambenavae
Konda nesam uyir vangidudhae

Male : Kaatril aadum deepam pola
Kannil thondrum uravae
Neelam pootha vaanam pola
Nenjl neendhum ninaivae

Male : Neerilae paal nila
Moozhgiyae podhilum
Eeramae aavadhillaiyae
Kaagidha poovilum
Vaasanai undena
Vaazhvadhu paavam illaiyae

Male : Kallum oru koyil sera
Deivamaagudhae
Ullae ezhum nesathaalae
Boomi vaazhudhae

Male : Solla mudiya sondham unaiyae
Thalli vida mattenae
Ulla varaiyil unnai ninaithae
Natchathiram parpenae

Male : Kodaiyil neeraiyum
Vaadaiyil theeyaiyum
Thediyae vaazhkai ooduthae
Saambalae aayinum
Nettriyil seraiyil
Poosaiyaai maari poguthae

Male : Ellaigalai thandum kaalam
Unai serudhae
Pullin nuni melae kooda
Thooral thengudhae

Male : Kangal ariya chithirangalai
Ennuyirum kaanadhoo
Suthum ulagil anbin azhagae
Sondhamena aagaadhoo

Male : Kaatril aadum deepam pola
Kannil thondrum uravae
Neelam pootha vaanam pola
Nenjl neendhum ninaivae

பாடகர் : ரவி. ஜி

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே!
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே!

ஆண் : ஏழை வீடு என அறிந்தும்
கோலம் போடும் நிலவொளியே!
முள்ளில் தூக்கி எறியையிலும்
பூவாய் ஆகும் ஒரு விதையே!

ஆண் : வெட்டவெளி பாதையிலே
வரும் உன் நினைவு மோதிடுதே!
கொத்துகிற பாம்பெனவே
கொண்ட நேசம் உயிர் வாங்கிடுதே!

ஆண் : காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே!
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே!

ஆண் : நீரிலே பால் நிலா
மூழ்கிய போதிலும்
ஈரமே ஆவதே இல்லையே!
காகித பூவிலும் வாசனை உண்டென
வாழ்வது பாவம் இல்லையே!

ஆண் : கல்லும் ஒரு கோயில் சேர
தெய்வமாகுதே!
உள்ளே எழும் நேசத்தாலே
பூமி வாழுதே!

ஆண் : சொல்ல முடியா சொந்தம் உனையே
தள்ளி விட மாட்டேனே!
உள்ள வரையில் உன்னை நினைத்தே
நட்சத்திரம் பார்பேனே!

ஆண் : கோடையில் நீரையையும்
வாடையில் தீயையும்
தேடியே வாழ்க்கை ஓடுதே!….
சாம்பலே ஆயினும்
நெற்றியில் சேரயில்
பூசையாய் மாறிப்போகுதே…

ஆண் : எல்லைகளை தாண்டும் காலம்
உனைச் சேருதே!
புல்லின் நுனி மேலே கூட
தூரல் தேங்குதே!

ஆண் : கண்கள் அறியா சித்திரங்களை
என்னுயிரும் காணாதோ!
சுத்தும் உலகில் அன்பின் அழகே
சொந்தமென ஆகாதோ!

ஆண் : காற்றில் ஆடும் தீபம் போல
கண்ணில் தோன்றும் உறவே!
நீலம் பூத்த வானம் போல
நெஞ்சில் நீந்தும் நினைவே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here