Singers : Ron Ethan Yohann and Shweta Mohan

Music by : Ron Ethan Yohann

Lyrics by : S. Gnanakaravel

Male : Kaatrilae mudhal isai
Vazhinthoduthae
Kaadhal devathai
Isai meettum neramo
Ninaithathum
Manam paranthidum kaadhalae
Vaana tharaagai
Viral neettum dhooramo

Male : Kannadiyaai idhayam viriya
Kaadhal mugam malarumae
Sollamalae piriyum tharunam
Kanneerum theanae

Male : Kaadhal ennum siragal ulagam
Kaalamellam parakkumae
Yaar varum bodhum
Yaar sellum bodhum
Vaasalgal moodathu kaadhal

Female : Kaalathin kannaadi
Un roobamai vandhu
Paalyaththai mun vaikkuthae
Nil endru sonnalumae
Thimirudan nenjam
Unnodu pin selluthae

Female : Kenjalaai konjalaai
Unnai ketkum
Kodhai nizhal kodi muththam
Oonjalaai aattiyae
Un ennam
Ennai thaalaattuthae innum

Female : Kana kaanum manam thedum
Undhan kaadhal madi
Vizha kolam manam poonum
Unnai kaanum nodi

Female : Kaatrilae mudhal isai
Vazhinthoduthae
Kaadhal devathai
Isai meettum neramo

Male : Engo nee vaazhnthayae dhoorathilae
Angum vaazhnthenae oorathilae
Swasathai neengadha un ninaivugal
Indru nenjodu paal vaarkuthae
Natpilae vittathai meendum indru
Nee korkkirai kaadhalaalae
Kaadhalum thaaimaiyum verillai
Endru unnaalae kandenae

Male : Adhae paavai adhae paarvai
Meendum en munnilae
Adhae kaadhal adhae thedal
Meendum un kannilae

Male : Kaatrilae
Female : Mudhal isai vazhinthoduthae
Male : Kaadhal devathai
Isai meettum neramo

Female : Ninaithathum
Manam paranthidum kaadhalae
Male : Vaana thaaragai
Viral meettum dhooramo

Female : Kannadiyaai idhayam viriya
Kaadhal mugam malarumae
Sollamalae piriyum tharunam
Kanneerum theanae

Both : Kaadhal ennum siragal ulagam
Kaalamellam parakkumae
Ovvoru naalum ovvoru thedal
Oyaadhu theeradhu kaadhal
Oyaadhu theeradhu kaadhal

பாடகர்கள் : ரோன் ஏதன் யோஹான் மற்றும் ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : ரோன் ஏதன் யோஹான்

பாடல் ஆசிரியர் : எஸ். ஞானகரவேல்

ஆண் : காற்றிலே முதல் இசை
வழிந்தோடுதே
காதல் தேவதை
இசை மீட்டும் நேரமோ
நினைத்ததும்
மனம் பறந்திடும் காதலே
வான தாரகை
விரல் நீட்டும் தூரமோ

ஆண் : கண்ணாடியாய் இதயம் விரிய
காதல் முகம் மலருமே
சொல்லாமலே பிரியும் தருணம்
கண்ணீரும் தேனே

ஆண் : காதல் எனும் சிறகால் உலகம்
காலமெல்லாம் பறக்குமே
யார் வரும் போதும்
யார் செல்லும் போதும்
வாசல்கள் மூடாது காதல்

பெண் : காலத்தின் கண்ணாடி
உன் ரூபமாய் வந்து
பால்யத்தை முன் வைக்குதே
நில் என்று சொன்னாலுமே
திமிருடன் நெஞ்சம்
உன்னோடு பின் செல்லுதே

பெண் : கெஞ்சலாய் கொஞ்சலாய்
உன்னை கேட்கும்
கோதை நிழல் கோடி முத்தம்
ஊஞ்சலாய் ஆட்டியே
உன் எண்ணம்
என்னை தாலாட்டுதே இன்னும்

பெண் : கனா காணும் மனம் தேடும்
உந்தன் காதல் மடி
விழாக்கோலம் மனம் பூணும்
உன்னை காணும் நொடி

ஆண் : எங்கோ நீ வாழ்ந்தாயே தூரத்திலே
அங்கும் வழ்ந்தேனே ஓரத்திலே
சுவாசத்தை நீங்காத உன் நினைவுகள்
இன்று நெஞ்சோடு பால் வார்க்குதே
நட்பிலே விட்டதை மீண்டும் இன்று
நீ கோர்க்கிறாய் காதலாலே
காதலும் தாய்மையும் வேர் இல்லை
என்று உன்னாலே கண்டேனே

ஆண் : அதே பாவை அதே பார்வை
மீண்டும் என் முன்னிலே
அதே காதல் அதே தேடல்
மீண்டும் உன் கண்ணிலே

ஆண் : காற்றிலே
பெண் : முதல் இசை வழிந்தோடுதே
ஆண் : காதல் தேவதை
இசை மீட்டும் நேரமோ

பெண் : நினைத்ததும்
மனம் பறந்திடும் காதலே
ஆண் : வான தாரகை
விரல் நீட்டும் தூரமோ

பெண் : கண்ணாடியாய் இதயம் விரிய
காதல் முகம் மலருமே
சொல்லாமலே பிரியும் தருணம்
கண்ணீரும் தேனே

இருவர் : காதல் எனும் சிறகால் உலகம்
காலமெல்லாம் பறக்குமே
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேடல்
ஓயாது தீராது காதல்
ஓயாது தீராது காதல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here