Singers : P. Susheela and P.B. Sreenivas

Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy

Male : {Kaatru vanthaal thalai saayum
Female : Naanal
Male : Kaadhal vanthal thalai saayum
Female : Naanam} (2)

Male : Aatrinilae karai puralum
Female : Vellam
Male : Aasaiyilae karaipuralum
Female : Ullam

Female : Aadai thottu vilaiyadum
Male : Thendral
Female : Aasai thottu vilayadum
Male : Kangal

Female : Oruvar mattum padipathu than
Male : Vedham
Female : Iruvaraga padikka sollum
Male : Kaadhal

Male : Kaatru vanthaal thalai saayum
Female : Naanal
Male : Kaadhal vanthal thalai saayum
Female : Naanam

Female : {Mazhai varumun vaanai moodum
Male : Megam
Female : Thirumanathukkumun manathai moodum
Male : Mogam} (2)

Female : Oodivarum naadivarum
Uravu kondu thedivarum
Uyir kalanthu sernthuvidum
Male : Maanum

Female : Paadivarum paruvamugam
Pakkam vanthu nidravudan
Paasathodu sernthu kolven
Male : Naanum…
Female : Naanum…
Male : Naanum….

Male : Kaatru vanthaal thalai saayum
Female : Naanal
Male : Kaadhal vanthal thalai saayum
Female : Naanam

Female : Aaaa…aaa..aaaa…aaaaa…aaa..

Male : {Anji anji nadanthu varum
Female : Annam
Male : Achathilae sivanthu vidum
Female : Kannam} (2)

Male : Konji varum vanji mugam
Gopurathu kalasamena
Anthi veyil nerathilae
Female : Minnum

Male : Minni varum nerathilae
Meni konda paruvathilae
Munnirunthal thotruvidum
Female : Ponnum

Male : Ullam…. Female : Thullum..

Male : Kaatru vanthaal thalai saayum
Female : Naanal
Male : Kaadhal vanthal thalai saayum
Female : Naanam

Male & Female : Ahaaa..hahaa..aaaaa
Ahaaa..hahaa..aaaaa..haaaaa…..

 

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

ஆண் : { காற்று வந்தால்
தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால்
தலை சாயும்
பெண் : நாணம் } (2)

ஆண் : ஆற்றினிலே
கரைபுரளும்
பெண் : வெள்ளம்
ஆண் : ஆசையிலே
கரை புரளும்
பெண் : உள்ளம்

பெண் : ஆடை தொட்டு
விளையாடும்
ஆண் : தென்றல்
பெண் : ஆசை தொட்டு
விளையாடும்
ஆண் : கண்கள்

பெண் : ஒருவர் மட்டும்
படிப்பதுதான்
ஆண் : வேதம்
பெண் : இருவராக
படிக்க சொல்லும்
ஆண் : காதல்

ஆண் : காற்று வந்தால்
தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால்
தலை சாயும்
பெண் : நாணம்

பெண் : { மழை வருமுன்
வானை மூடும்
ஆண் : மேகம்
பெண் : திருமணத்துக்கு
முன் மனதை மூடும்
ஆண் : மோகம் } (2)

பெண் : ஓடி வரும்
நாடி வரும் உறவு
கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து
விடும்
ஆண் : மானும்

பெண் : பாடி வரும்
பருவ முகம் பக்கம்
வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து
கொள்வேன்
ஆண் : நானும்
பெண் : நானும்
ஆண் : நானும்

ஆண் : காற்று வந்தால்
தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால்
தலை சாயும்
பெண் : நாணம்

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : { அஞ்சி அஞ்சி
நடந்து வரும்
பெண் : அன்னம்
ஆண் : அச்சத்திலே
சிவந்து விடும்
பெண் : கன்னம் } (2)

ஆண் : கொஞ்சிவரும்
வஞ்சி முகம் கோபுரத்து
கலசமென அந்தி வெயில்
நேரத்திலே
பெண் : மின்னும்

ஆண் : மின்னி வரும்
நேரத்திலே மேனி
கொண்ட பருவத்திலே
முன்னிருந்தால் தோற்று
விடும்
பெண் : பொன்னும்

ஆண் : உள்ளம்
பெண் : துள்ளும்

ஆண் : காற்று வந்தால்
தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால்
தலை சாயும்
பெண் : நாணம்

ஆண் & பெண் : ஆஹா
ஹாஹா ஆஆ ஆஹா
ஹாஹா ஆஆ ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here