Singer : Seerkazhi Govindarajan

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Kannadasan

Male : Kaavalukku velundu
Aadalukku mayilundu
Kovilukku porulennadaa
Kumaraa neeyirukkum idamthaanadaa

Male : Kaavalukku velundu
Aadalukku mayilundu
Kovilukku porulennadaa
Kumaraa neeyirukkum idamthaanadaa

Male : Nathigalilum malargalilum
Nadanthu varum thendralilum
Un mugam kandaenadaa
Un mugam kandaenadaa
Engum shanmugam nindraanadaa

Male : Om muruga endravudan
Uruguthadaa ullamellaam
Oru ganam sonnaenadaa
Angae saravanan vanthaanadaa

Male : Kaavalukku velundu
Aadalukku mayilundu
Kovilukku porulennadaa
Kumaraa neeyirukkum idamthaanadaa

Male : Deivayaanai thedi vanthaalae
Vizhi vandodu
Kanthanunnai kaana vanthaalo
Deivayaanai thedi vanthaalae
Vizhi vandodu
Kanthanunnai kaana vanthaalo
Arul kannodu
Bakthanennai paarkka vanthaalo

Male : Oru magal azhagiya thirumagal
Valli vanthaalo
Kuramagal varuvathil mudhalmagal
Kobam kondaalae

Male : Oru magal azhagiya thirumagal
Valli vanthaalo
Kuramagal varuvathil mudhalmagal
Kobam kondaalae

Male : Irandukkum idaiyilae mirandathu yaenadaa
Sodhanai enakku Vaiththaayae
Iru pennaalae vedhanai unakku vaiththaayae
En munnalae naadagam nadakka vaiththaayae

Male : Aaru karthigai pengalidam
Valarththaai muruga thaalaelo
Aaru karthigai pengalidam
Valarththaai muruga thaalaelo
Azhagiya thamarai malargalilae
Thavazhnthaai kumara thaalaelo
Thaalaelo nee thaalaelo
Thaalaelo nee thaalaelo

Male : Aaduvathum thottiladaa
Anbu magan kattiladaa
Aaduvathum thottiladaa
Anbu magan kattiladaa
Paaduvathu valli alladaa
En kanthaiyaa yaezhaiyudan palli kolladaa

Male : Thirupaatham naan thaanga thaalaelo
Intha puviyaavum nee thaanga thaalaelo
Kanthaiyyaa velaiyaa thaalaelo
En thangaiyaa murugaiyaa thaalaelo
Nee thaalaelo….nee thaalaelo…..

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா

ஆண் : காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா

ஆண் : நதிகளிலும் மலர்களிலும்
நடந்துவரும் தென்றலிலும்
உன் முகம் கண்டேனடா
உன் முகம் கண்டேனடா
எங்கும் சண்முகம் நின்றானடா

ஆண் : ஓம் முருகா என்றவுடன்
உருகுதடா உள்ளமெல்லாம்
ஒரு கணம் சொன்னேனடா
அங்கே சரவணன் வந்தானடா

ஆண் : காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா

ஆண் : தெய்வயானை தேடி வந்தாளே
விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ
தெய்வயானை தேடி வந்தாளே
விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ
அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள்
வள்ளி வந்தாளே
குறமகள் வருவதில் முதல்மகள்
கோபம் கொண்டாளே

ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள்
வள்ளி வந்தாளே
குறமகள் வருவதில் முதல்மகள்
கோபம் கொண்டாளே

ஆண் : இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா
சோதனை எனக்கு வைத்தாயே
இரு பெண்ணாலே வேதனை உனக்கு வைத்தாயே
என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே

ஆண் : ஆறு கார்த்திகைப் பெண்களிடம்
வளர்ந்தாய் முருகா தாலேலோ
ஆறு கார்த்திகைப் பெண்களிடம்
வளர்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தாமரை மலர்களிலே
தவழ்ந்தாய் குமரா தாலேலோ
தாலேலோ நீ தாலேலோ
தாலேலோ நீ தாலேலோ

ஆண் : ஆடுவதும் தொட்டிலடா
அன்பு மகன் கட்டிலடா
ஆடுவதும் தொட்டிலடா
அன்பு மகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா
என் கந்தையா ஏழையுடன் பள்ளி கொள்ளடா

ஆண் : திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ
இந்தப் புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
என் தங்கையா முருகையா தாலேலோ
நீ தாலேலோ……நீ தாலேலோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here